சுமத்ரா நிலநடுக்கமும் சுனாமி, பேரலைகளும் - ஓர் பார்வை


நாம் வாழும் உலகில் அவ்வப்போது புயல், மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப்புக்கள் என ஏதாவது ஒரு சோதனை நடந்து கொண்டேயிருக்கின்றது.

1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர். 1935ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில்  28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும், 1960ல் மொரோக்காவில் 12,000 பேரும், 1976ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும், 1978ல் ஈரானில் 25,000 பேரும், 1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும், 1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும், 1990ல் ஈரானில் 50,000 பேரும், 1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும், 1995ல் ஜப்பானில் 6,000 பேரும், 1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும், 1999ல் துருக்கில் 17,000 பேரும், 2001ல் குஜராத்தில் 13,000 பேரும், 2003ல் ஈரானில் 41,000 பேரும் பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல். இவை தவிர அவ்வப்போது சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு.

இந்த நிலநடுக்கங்கள் எல்லாம் உலகை உலுக்கிக் குலுக்கியது. அப்போதெல்லாம் நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம்? ஈரான் எங்கோ இருக்கின்றது என்று நினைத்து நாம் நம்முடைய பாவங்களில் மூழ்கிக் கொண்டிருந்தோம். அந்தப் பூகம்பத்திற்கும் நமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எண்ணி வீண் விளையாட்டுக்களில், காமக் கூத்துக்களில், களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.
 
ஒரு பள்ளிக் கூடம். அதில் படிக்கின்ற மாணவனிடம் ஆசிரியரின் பிரம்பு ஆசீர்வதிக்கும் போது, அருகிலுள்ள மாணவன் 'சேட்டை செய்தால் நமக்கும் இந்தச் சாட்டை அடி தான்' என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி பக்கத்து மாணவன் சேட்டை செய்தால் அவனிடம் ஆசிரியர் ஒழுங்காக இருந்து கொள் என்று அதட்டி ஓர் எச்சரிக்கையை விடுத்து கண்டிப்பார். அதன் பிறகும் சேட்டை செய்தால் அடித்துத் தண்டிப்பார். அதற்கு மேல் தற்கா­க நீக்கம். அடுத்து நிரந்தர நீக்கம் தான்.

இதுபோன்று நம்முடைய வீடுகளிலும் மனைவியைக் கணவன் கண்டிக்கும் போது பிள்ளைகள் அடங்கி ஒடுங்கிப் போவதும், பிள்ளைகளைப் பேசும் போது மனைவி அமைதியாகி விடுவதும் எதைக் குறிக்கின்றது? அங்கு விழும் திட்டு நமக்கும் தான். ஏதாவது நாம் வாலாட்டினால் குடும்பத் தலைவரின் அக்கினிக் கனல் நம் பக்கம் திரும்பி விடும் என்று எச்சரிக்கையாக நடப்பர்.

இதுபோன்று தான் அல்லாஹ்வும் ஒரு சமுதாயத்தை உடனே அழித்து விடுவதில்லை. நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகளை பூகம்பம், புயல், வெள்ளப்பெருக்கு, எரிமலை வெடிப்பின் மூலம் சோதிக்கின்றான்.  நம்மைச் சுற்றியுள்ள ஊர்களில் நடந்த சோதனைகள் மூலம் அல்லாஹ் நமக்குப் பாடம் படித்துத் தருகின்றான் என்று விளங்கிக் கொண்டு நாம் தீமைகளி­ருந்து விலக வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கின்றான்.

உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம். இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவு படுத்துகிறோம். (அல்குர்ஆன்46:27)

நம்மைச் சுற்றி இருப்பவர்களை அழித்ததைப் பற்றி நமக்கு எச்சரிக்கையையும் அழிவுக்குண்டான நகர மக்களுக்கு அது தண்டனை எனவும் இந்த வசனம் கூறுகின்றது.  ஒரு நாட்டில் பூகம்பம் என்றால் அது நமக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை ஆகும். அதே சமயம் அந்நாட்டு மக்களுக்கு அது நேரடி தண்டனையாகும். நாம் இந்தச் சோதனைகளைக் கண்டு பாடம் பெறவில்லை எனில் நம்மை இறைவன் நேரடியாகச் சோதிப்பான்.

அல்லாஹ்வின் நியதி

ஒரு பணியி­ருந்து அல்லது ஒரு அமைப்பி­ருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் முத­ல் 'ஷோ காஸ்' நோட்டீஸ் (காரணம் கேட்டு அறிக்கை) அனுப்புவது, அதன் பிறகு தற்கா­கப் பணி நீக்கம், அதன் பிறகு நிரந்தர நீக்கம் என்ற படிப்படியான நியதிகளை மக்கள் கடைப்பிடிக்கின்றார்கள். மனிதர்களே இத்தகைய நியதிகளைக் கடைப்பிடிக்கும் போது அனைத்து அருளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அல்லாஹ் இதை விட அதிகமான நியதிகளைக் கடைப்பிடிப்பான் அல்லவா?

முத­ல் துருக்கி! துருக்கியில் பூகம்பமா? என்று சிறிய அதிர்ச்சியை வெளியிட்டு விட்டு அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் குஜராத்தில் தண்டனை வழங்கி எச்சரிக்கை செய்கின்றான். அதாவது துருக்கி ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் என்றால் குஜராத் ஒரு தற்கா­கப் பணி நீக்கம். இப்படி ஒவ்வொரு நாடும் தங்களது சுற்றுப் பகுதியில் நடக்கும் பூகம்பங்களி­ருந்து படிப்பினை பெற வேண்டும்.

இதல்லாமல் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ளம், புயல் போன்ற சோதனைகளை மாற்றி மாற்றி வழங்கியுள்ளான்.

அவர்களைப் பூமியில் பல கூட்டத்தினராகப் பிரித்தோம். அவர்களில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு அல்லாதோரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் திருந்துவதற்காக அவர்களை நல்லவை மூலமும், தீயவை மூலமும் சோதித்தோம். (அல்குர்ஆன் 7:168)

முத­ல் செழிப்பு, பின்னர் சேதாரம் என்று மாற்றி மாற்றி வழங்குகின்றான். இதன் பிறகும் திருந்தவில்லையென்றால் மனிதனுக்கு ஒரு இறுதிக் கெடுவை அல்லாஹ் அளிக்கின்றான். அந்த இறுதிக் கெடுவை நிர்ணயிக்கும் போது, கேடு வரும் பின்னே! மதி கெட்டு வரும் முன்னே! என்பது போல் மனிதன் ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றான்.

அதாவது அவனுக்கு வந்த சோதனைக்குப் பிறகு, சேதத்துக்குப் பிறகு ஒரு செழிப்பை அல்லாஹ் வழங்குகின்றான். மனிதனின் அவகாசத்தை நீட்டிக் கொடுக்கின்றான். அப்போது மனிதன், 'வெள்ளம், புயல், பூகம்பம் எல்லாம் மனித வாழ்வில் சகஜம்! நமது பாட்டன், பூட்டன்களுக்கெல்லாம் இது நேர்ந்திருக்கின்றது! இது ஒன்றும் புதிதல்ல' என்ற முடிவுக்கு வந்து தீமையை விட்டு விலக மறுக்கின்றான். அப்போது அல்லாஹ்வும் ஒரு இறுதி முடிவுக்கு வந்து விடுகின்றான்.

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானி­ருந்தும், பூமியி­ருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம். (அல்குர்ஆன் 7:96)

இந்த வழிமுறையைத் தான் அல்லாஹ் இஸ்ரவேலர்களிடம் கடைப்பிடித்தான்.

படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம் (அல்குர்ஆன் 7:130)

இதே வழிமுறை தான் இப்போதும் நடந்திருக்கின்றது. குஜராத் பூகம்பத்தில் நாம் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் சுதாரிக்கவில்லை.

அல்லாஹ் சிறு சிறு சோதனைகளை அளிக்கும் போதே அந்தச் சமுதாயம் தனக்கு மாறு செய்வதை விட்டு விட்டு திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். 

அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். (அல்குர்ஆன் 6:43) 

நாம் அவர்களுக்கு அருள் புரிந்து, அவர்களிடம் உள்ள துன்பத்தை நீக்கியிருந்தால் தமது அத்துமீற­ல் தடுமாறி மூழ்கிக் கிடப்பார்கள். அவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம். அவர்கள் தமது இறைவனுக்குப் பணியவுமில்லை; மன்றாடவும் இல்லை.  (அல்குர்ஆன் 23:75,76)

இவ்வாறு தவறு செய்யும் மக்களுக்கு அல்லாஹ் பல வாய்ப்புகளைக் கொடுத்து அம்மக்களுக்கு அவகாசம் அளிக்கிறான்.  இந்த அவகாசத்திலும் திருந்தவில்லை என்றால் இறுதியில் கடுமையாகப் பிடிக்கின்றான்.

சாவுகளுக்கு இரையான தீவுகள்

கடல் கொந்தளிப்புக்குப் ப­யாவதற்கு அதிகம் சாத்தியக் கூறு நிறைந்த இடம் தீவுகள் தான். ஆனால் அந்தத் தீவுகள் தான் விபச்சாரங்களுக்குத் தீனி போடும் உல்லாசபுரிகளாகத் திகழ்கின்றன. அந்தத் தீவுகள் சுனாமி என்ற சாவு அலைகளுக்குப் ப­யாகி இருக்கின்றன. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவி­ருந்து, தாய்லாந்தின் பி பி புகெட், அந்தமான் நிகோபர், மாலத்தீவுகள் வரை சாவின் கோரப் பிடியில் சிக்கியுள்ளன.

இதுபோன்ற உல்லாசபுரிகளில் உள்ள மக்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளை மறந்தார்கள். அங்கு போகும் மக்கள் உல்லாசத்தில் திளைத்திருக்கின்றார்கள் என்றால் இங்குள்ள கிராம, நகர மக்கள் பக­லும், இரவிலும் அந்தக் காம ரசக் காட்சிகளை டிவிகளிலும், திரையரங்குகளிலும் கண்டு களிக்கின்றனர்.

அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி, அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கட­ல் மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் 7:136)

இவ்வாறு இறுதியாக அல்லாஹ்வுடைய வேதனை வருகின்ற போது அம்மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பார்கள். அல்லது வீண் விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பார்கள்.

அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா? அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது முற்பக­ல் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா? (அல்குர்ஆன் 7:97,98)

இந்தோனேஷியாவில் பண்டா ஏசெக் என்ற நகரில் விளையாட்டுத் திட­ல், கால்பந்துப் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த ஆயிரம் ரசிகர்களும் சுனாமி அலைகளுக்குப் ப­யாகி விட்டனர் என்று தினத்தந்தி (28.12.04) கூறுகின்றது.

இன்று கூடப் பார்க்கிறோம், ஞாயிற்றுக் கிழமைகளில் மலர்ந்திருக்கும் காலை வேளைகளிலும் மயங்கும் மாலை நேரங்களிலும் வீடுகள் அமைதியாக அடங்கிப் போய்விடுகின்றன.  வீதிகள் மயானமாகி வெறிச்சோடிக் கிடக்கின்றன.  வண்ணத் தொலைக்காட்சிகளின் எண்ணற்ற அலைவரிசைகளில் ஆபாச, வன்முறை வெறியாட்ட, காதல் காமக் காட்சிகளில் மக்கள் மூழ்கிக் கிடக்கின்றனர். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் தொலைக்காட்சி முன்பு பெட்டிப் பாம்புகளாய் அடங்கிக் கிடக்கின்றனர். அதற்குப் பிறகு ஒரு நீண்ட உறக்கம்.

நம்முடைய வீடுகளில் போட்டா போட்டிக் கொண்டு அத்துமீறி நுழைகின்ற அலைவரிசைகள் - கலாச்சார படையெடுப்பு நடத்தும் வலைவரிசைகள். சீரழிக்கும் இந்தச் சிலந்தி வலைவிரிப்புகளில் மீட்க முடியாத அளவுக்கு பச்சிளம் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவியர், பருவ வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் மாட்டி மயங்கிக் கிடக்கின்றனர்.

இணை வைத்தல் எனும் கொடிய பாவம்

அல்லாஹ்வின் கோபக் கனல் வீசுகின்ற கொடும் பாவங்களி­ருந்து மக்கள் விலகவில்லை. அந்தப் பாவங்களில் மிக முக்கியமானது படைத்த இறைவனுக்கே இணை வைக்கும் ஷிர்க் எனும் பெரும் பாவம். படைத்தவனை விட்டு விட்டு மண்ணில் புதைந்த பெரியார்களையும், சிலைகளையும் வணங்குகின்ற கொடுமை!

கிராம மக்கள் பற்பல தெய்வங்களை வணங்குவார்கள். அவற்றுக்கு அறுத்துப் ப­லியிடுவார்கள். நேர்த்திக் கடன் செய்வார்கள். ஆனால் இந்தத் தெய்வங்கள் எல்லாம் இவர்களின் கூக்குரலைக் கேட்டுக் காப்பாற்ற முன்வரவில்லை. குறிப்பாக முஸ்­ம்கள் கற்க வேண்டிய பாடம் என்னவென்றால், இறந்து விட்ட அவ்­யாக்கள் உதவி செய்வார்கள் என்று நம்புவது வெறும் கற்பனை, கானல் நீர் என்பது தான். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மதுரையி­ருந்து நாகூர் தர்ஹாவுக்குச் சென்ற பயணக் கூட்டம்.

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த அப்துர்ரஷீத் தனது குடும்பத்தினருடன் வேனில் நாகூர் தர்ஹாவுக்குச் சென்றுள்ளார். நாகூர் தர்காவில் பிரார்த்தனை செய்து விட்டு, அருகிலுள்ள மற்றொரு தர்காவுக்குச் சென்றுள்ளனர். மொத்தம் 21 பேரில் 14 பேர் வேனில் இருந்துள்ளனர். அப்துர்ரஷீத், இவரது மனைவி நூர் நிஷா பேகம், மகள்கள் ஷகிலா பானு, ஹசீனா, பாத்திமா, மருமகள் ரிஸ்வானா, பேரன் முஷாரப் ஆகிய ஏழு பேரும் தர்ஹாவில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது சுனாமி அலையில் சிக்கி உயிரிழந்தனர். டிரைவர் சமயோசிதமாக வேனை வேகமாக ஓட்டிச் சென்று விட்டதால் வேனில் இருந்த 14 பேரும் தப்பித்து விட்டனர்.

கொட்டாம்பட்டியைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது இஸ்மாயீல் என்பவரின் தந்தை அப்துஸ்ஸலாம். ஹோமியோபதி டாக்டரான இவர் ஹஜ்ஜுக்குச் செல்லவுள்ளார். அதை நாகூரிலுள்ள தனது உறவினர்களிடம் தெரிவித்து விட்டு நாகூர் தர்காவில் வழிபடச் சென்றிருந்தார். உறவினர்கள் உட்பட 11 பேர்களுடன் சென்ற அவரது கார் கடல் கொந்தளிப்பில் சிக்கியது. அலையில் அடித்துச் செல்லப்பட்ட அப்துஸ்ஸலாம், அவரது மனைவி மெகருன்னிஸா, பேரன் அப்துல் வாஹித், உறவினர்கள் ஷாபிநெத், தாஜுத்தீன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மூன்று பேரைக் காணவில்லை. மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இதே போன்று நாகூர் தர்ஹாவுக்குப் பிரார்த்தனை செய்வதற்காகச் சென்றிருந்த மதுரை மஹபூப் பாளையத்தைச் சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் மனைவி ஷாயிரா பீவி, குழந்தைகள் சுப்ரா பேகம், முஹம்மது அஜ்மல் ஆகிய மூவரும் கட­ல் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் சிறுவன் அஜ்மலைத் தவிர மற்ற இருவரின் சடலங்கள் கிடைத்து நாகூரிலேயே அடக்க செய்யப்பட்டது.

இந்தச் செய்திகளை 28.12.2004 அன்றைய தினமணி வெளியிட்டுள்ளது. இதுபோன்று வேளாங்கன்னி சர்ச்சுக்குச் சென்ற போது ப­யானவர்களின் விபரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தச் செய்திகள் எதைக் காட்டுகின்றன?

அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் இந்தச் சோதனைகளி­ருந்து காப்பாற்ற முடியாது என்பதைத் தான் இந்தச் செய்திகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இதோ அல்லாஹ் விடுக்கும் அறைகூவலைப் பாருங்கள்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 7:194)
 
அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (அல்குர்ஆன்7:197)

சமூகக் கொடுமைகள்

சக மனிதன் பொருளாதார நீதியில் பாதிக்கப்படும் போது மனிதாபிமான அடிப்படையில் அவனுக்குப் பொருளை கடனாகக் கொடுத்து உதவுவதை விட்டு, அவனிடம் வட்டிக்குக் கொடுத்து வட்டி ஏறிப்போய் அவன் அசலையும் வட்டியையும் திரும்பக் கட்டாமல் தவிக்கின்றான்.  அவனுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அவனைச் சுரண்டி, வீடு இருந்தால் அந்த வீட்டைத் தன் பெயருக்குத் தாரை வார்த்தல், அவனிடம் வியாபாரம் இருந்தால் அல்லது விவசாயத்திற்கான நிலமிருந்தால் அதை அப்படியே அபகரித்து அவனையும் அவனது குடும்பத்தையும் அம்போவென்று தெருவில் விட்டு விடுதல்.

கொண்ட மனைவியிடமே 'கொண்டு வா! இல்லையேல் உன்னைக் கொன்று விடவா?' என்று மிரட்டி கொள்ளையடித்தல், கேட்ட பொருளைக் கொண்டு வரவில்லையென்றால் மனைவியின் கண்ணைப் பறித்து குருடாக்குதல் , சூடுபோடுதல் , இன்னபிற சித்ரவதைகளைச் செய்தல்.  இதைத் தாங்க முடியாமல் ஒரு சில பெண்கள் தற்கொலை செய்து விடுகின்றனர்.  தற்கொலை செய்யவில்லை என்றால் உயிருடன் தீ வைத்து, கொளுத்திக் கொல்கின்றனர்.

பயணத்தின் போது இவனது சுமைகளை சுமக்கும் கூலி­த் தொழிலாளிக்கு தாராளமாகக் கூ­லி வழங்கும் இந்தத் தர்மவான், தன் உடலை சுகமளிக்கக் கொடுத்து, இவனது வாரிசு என்ற சொத்தை பத்து மாதங்கள் தன் வயிற்றில் சுமந்து, நடமாடும் சுமைதாங்கியாக அலைந்து மரணவேதனை அனுபவித்து, இவனுக்குப் பிள்ளையை பெற்றுத் தருகிறாள்.  இந்த தியாகத் திருஉருவிடத்தில் கொண்டு வா என்று கொடுமைப் படுத்துதல்.  இந்த வரதட்சணைக் கொடுமையின் காரணமாக பருவமடைந்து பதினைந்து அல்லது இருபது வருட காலம் திருமணத்திற்காக கொடுப்பதற்குத் தொகையின்றி காத்திருக்கின்றாளே! இது அநியாயமில்லையா? இந்தப் பெண்கள் கையேந்தினால் இந்தப் பூமி தாங்காது!

இந்த அநியாயக்காரர்கள் திருந்துவதற்கு வாய்ப்பாகத் தான் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழிவை ஏற்படுத்தி நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றான். இதிலும் திருந்தாமல் தங்கள் தவறிலேயே நிலைத்திருக்கும் போது இறுதியில் தனது தண்டனையை நேரடியாக இறக்குகின்றான்.

எத்தனையோ ஊர்களுக்கு அவை அநீதி இழைத்த நிலையில் அவகாசம் அளித்தேன். பின்னர் அதைத் தண்டித்தேன். என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 22:48)

சுமத்ராவில் புறப்பட்ட சுனாமி - பேரலைகள்

தண்டனை என்றால் சாதாரண தண்டனை அல்ல! தெற்காசியாவில் மொத்தம்  கணக்கின்படி சுமார் 90 ஆயிரம் பேர் இறந்து விட்டனர். இந்தோனேஷியாவில் 50,000 பேரும், இலங்கையில் 25,000 பேரும், தாய்லாந்தில் 2,000 பேரும், இந்தியாவில் 12,000 பேரும் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் சுமார் 6500 பேர், இதில் நாகப்பட்டிணத்தில் 5000 பேரும், கன்னியாகுமரியில் 800 அடங்குவர். சடலம் கிடைத்ததன் அடிப்படையிலான கணக்கு இது.

இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கியது எது? சுனாமி பேரலைகள்! தமிழக மக்கள் இதுவரை கண்டிராத, குடிமக்களைக் கொன்று தீர்த்த இந்த அலைகள் எப்படித் தோன்றின? இவற்றைப் பார்ப்பதற்குக் கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆழிக்கால் கடற்கரைக்குச் செல்வோம்.

ஞாயிற்றுக்கிழமை காலை! கடல் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக கரையில் சீறிப் பாய்கின்றன. திடீரென்று, தான் கேட்டதைத் தராத தாயின் மீது கோபம் கொண்டு ஓடும் குழந்தையைப் போல் தரையை விட்டு கடல் நூறு மீட்டர் அளவுக்கு உள்ளே சென்று விடுகின்றது. அப்போது கட­ன் அடிப்பாகமான தரை வெள்ளை வெளேரென்று பார்ப்போரின் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றது. வெள்ளி மீன்கள் வானத்து வெள்ளிகள் போல் மின்னுகின்றன. நண்டுகள் நடனமாடுகின்றன. நத்தைகள் மெத்தை மேட்டில் அதிர்ச்சி எதையும் வெளிப்படுத்தாத வண்ணம் சகஜமாக நகர்கின்றன.

உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இந்தக் காட்சிகளைக் கண்ட மக்கள் சும்மா இருப்பார்களா? இயற்கை அதி அற்புதக் காட்சிகளைக் கண்டு ஓடுகின்றார்கள். கைகளில் மீன்களை அள்ளுகின்றார்கள். அல்குர்ஆனின் வசனத்துடன் நூற்றுக்கு நூறு ஒப்பாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

தமது பள்ளத் தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். ''இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். ''இல்லை! இது எதற்கு அவசரப் பட்டீர்களோ அதுவே! துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (அல்குர்ஆன்46:24)

ஆம்! மழை பொழியும் மேகம் என்று ஆது கூட்டத்தார்கள் கருதியது போன்று தான் கடற்கரையில் நின்ற மக்கள் கூட்டம், மீன் தரும் கடல் அலை என்று நினைத்தார்கள். அப்போது தான் உள்ளே சென்ற அலை தான் சென்ற காரணத்தைச் சொல்ல வந்தது. இல்லை! அவர்களைக் கொல்ல வந்தது. உள்ளே சென்ற அலை ஏன் திரும்ப வந்தது?

இந்தியாவி­ருந்து 2300 கி.மீ. தூரத்தில் உள்ள சுமத்ரா பகுதியில் கட­ல் சுமார் 20 அல்லது 30 கி.மீ. ஆழத்தில், அடித்தளத்தில் ஒரு வெடிப்பு ஏற்படுகின்றது. அதாவது ஒரு நிலச்சரிவு ஏற்படுகின்றது. அந்தப் பள்ளத்தில் இந்தக் கடல் தண்ணீர் போய் விழுகின்றது. அப்போது 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் அளவிற்குக் கடல் பின் வாங்குகின்றது. பு­ பதுங்குவது பயத்தினால் அல்ல! அது பாய்வதற்கு என்பது போல் இந்தக் கடல் அலை அப்போது நடந்து கொண்டது.

(திருச்செந்தூர் கடல் பகுதியில் இவ்வாறு கடல் தண்ணீர் உள் வாங்கியதை அங்குள்ள கோயி­ன் அற்புதம் என்று கூறும் அறிவிலி­களும் இருக்கத் தான் செய்கின்றார்கள். சுமத்ராவுக்கும் தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் இலங்கை குறுக்கிட்டதால் இந்த நகரங்கள் பேரழிவி­ருந்து தப்பி விட்டன என்பது தான் உண்மை)

எழுநூறு மைல் வேகத்தில் எகிறி வரும் ராட்சத அலை

இவ்வாறு பின் வாங்கி பதுங்கி விட்டு, அதாவது பள்ளத்தில் விழுந்து விட்டு அந்த அலை பாயும் போது அதன் உயரம் 10 அடி முதல் 50 அடி வரை இருக்கும். அது கரையில் வந்து பாயும் போது, ஆர்ப்பரிக்கும் கோபத்துடன் வந்து சாயும் போது அதன் வேகம் மணிக்கு சுமார் 500 கி.மீ. முதல் 1000 கி.மீ.வரை இருக்கும். ஒரு ஜெட் விமானத்தின் வேகம் மணிக்கு 500 கி.மீ. தரை மார்க்கத்தில் செல்லும் வாகனங்களின் வேகம் அரபு நாட்டு சாலைகளில் கூட 170ஐ தாண்டாது. மணிக்கு 1000 கி.மீ. என்றால் அதன் அசுர வேகம், உக்கிரம் எப்படி இருக்கும் என்று வர்ணிக்கத் தேவையில்லை. கரை தாண்டும் போது அந்த அலையின் உயரம் 500 மீட்டர் வரை இருக்கும்.

1896ல் ஜப்பானில் சுனாமி தாக்கும் போது ஏழு மாடி உயரத்திற்கு எழுந்து ஆர்ப்பரித்து போர்ப் பரணி பாடியுள்ளது. இப்படிக் கரையை நோக்கி வந்து திரும்பக் கடலை நோக்கிச் செல்லும் போது அது கட்டடங்களைக் கூட விட்டு வைக்காமல் இழுத்துச் சென்று விடும். மனிதர்கள் எம்மாத்திரம்? அப்போது ஆடிய ஆட்டத்தைத் தான் சுனாமி இப்போது இங்கே ஆடி முடித்திருக்கின்றது. இவ்வாறு இந்த சுனாமி அலை, கொல்ல வந்த விபரம் கொல்லம் ஆழிக்கால் மக்களுக்குத் தெரியாமல் போனது. அதனால் தான் உள்ளே போன அலைக்குப் பின்னால் உள்ளே போனார்கள். அதே அலை மிக வேகமாகத் திரும்ப வந்தது. அப்போது தரையை நோக்கி முன்னே ஓடி வந்தார்கள். அவ்வாறு உயிரைக் காக்க வேகமாக ஓடி வரும் போது, முன்னே திருவாங்கூர் கால்வாய் குறுக்கே வந்து நின்றது. அலை அவர்களில் அதிகமானோரைத் தின்றது. அவர்களில் அதிகமானோர் ப­யானதற்குக் காரணம் அவர்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தது தான்.

பத்து நிமிடங்களில் பழங்கதையாகிப் போனவர்கள்

ஒரு பத்து நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 9 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் ஒரு லட்சம் பேர் கா­லி! ஆசியா தன் வரைபடத்தில் சில கிராமங்களை இழந்து விட்டது.

சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் ஏற்பட்ட இதே வேக நிலநடுக்கம் தரைப் பகுதியில் ஏற்பட்டிருந்தால் இந்தியாவே தரை மட்டமாகியிருக்கும். இதன் பாதிப்பு பத்தாயிரம் அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருக்கும். புவியமைப்பியல் வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சித் தகவல் இது!

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானி­ருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்கு சக்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பக­லோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (அல்குர்ஆன் 10:24) 

அவர்களைப் பழங்கதைகளாக்கினோம். அவர்களை உருக்குலைத்தோம். பொறுமையும் நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்34:19)

பழங்கதைகள் ஆன அவர்கள் அழியும் போது ஏற்பட்ட அந்தக் கதி தான் நமக்கு இந்த உலகம் அழியும் நாளை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.

ஆழிக்கால் கரையில் பாய்ந்த அலையின் போது, உடல் ஊனமுற்ற ஒருவர் தன் இரு குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு ஓட எத்தனித்த போது அலை அவர்களைத் தூக்கி எறிகின்றது. தன் கண் முன்னே இரு குழந்தைகளும் அடித்துச் செல்லப்படுகின்றார்கள். நல்ல உடல் நிலை உள்ளவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை எனும் போது ஊனமுற்ற அவர் என்ன செய்வார்? தண்ணீர் வற்றும் வரை தென்னை மரத்தைத் தொற்றிக் கொண்டு தன் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றார்.

தங்கள் கண் முன்னால் தாய் தந்தைகள் இழுத்துச் செல்லப்பட்டதைப் பார்த்த பலசா­களான இளைஞர்கள் 24 மணி நேரம் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி தவித்தனர். மனமுடைந்து குமுறினர். இது குளச்சல் பகுதியில்.

காலையில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அச்சமடைந்த கல்பாக்கம் அணு விஞ்ஞானி மகேந்திரன் தனது மனைவியையும் இரு மக்களையும் கீழே செல்லுமாறு கூறியுள்ளார். பின்னர் தன் தந்தையை அழைத்துக் கொண்டு கீழே வந்தார். இதற்குள் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் புகவே மீண்டும் குடியிருப்பை நோக்கிச் சென்றுள்ளார். வீட்டி­ருந்து திடலுக்கு வந்த அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் அங்கிருந்து ஒரு மேடையை நோக்கி ஓடியுள்ளனர். அதற்குள் கடல்நீர் அவர்களை அடித்துச் சென்று விட்டது.

''நானும் என் மனைவி மக்களும் வேளாங்கண்ணி கடற்கரையில் நின்று கொண்டிருந்தோம். அப்போது இதுவரையில் கண்டிராத வித்தியாசமான அலை கிளம்பி வருவதைப் பார்த்து, என்னுடைய மனைவியையும் இரு குழந்தைகளையும் திரும்பச் சொன்னேன். அதற்குள் அந்த அலை, வலை போல் எங்களை சுற்றிக் கொண்டது. என்னுடைய இரண்டு பிள்ளைகள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை'' என்று வேதனையுடன் கூறுகின்றார் நெய்வே­யைச் சேர்ந்த காட்வின் என்பவர்.

இந்தச் சம்பவங்கள் நமக்கு அல்குர்ஆனின் இந்த வசனங்களை நினைவூட்டுகின்றன.

''ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரி­ருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையி­ருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் (நூஹ்) கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 11:43)

''நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறை வேறும்?)'' என்று அவர்கள் கேட்கின்றனர். ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும். அப்போது அவர்களுக்கு மரண சாசனம் கூற இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள்.    (அல்குர்ஆன் 36:48,49,50)

அல்லாஹ்வின் போர் படைகள்

எல்லாம் வல்ல அல்லாஹ் மனித சமுதாயத்தை அழிக்க நாடினால் வானத்திலிருந்து அவன் எந்த வானவர் படையையும் அனுப்ப வேண்டியதில்லை. மனிதனைச் சுற்றியுள்ள இயற்கை ஆற்றல்களை அவன் ஏவி விட்டால் அதுவே போதும். அவை மனித இனத்தையே தாவி அழித்து விடும்.

அவருக்குப் பின் அவரது சமுதாயத்திற்கு எதிராக ஒரு படையை வானத்தி­ருந்து நாம் இறக்கவில்லை. (அவ்வாறு) இறக்குவோராகவும் நாம் இருந்ததில்லை. அது ஒரே ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள்.  (அல்குர்ஆன் 36:28,29)

நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்காக குரல் எழுப்புவோர் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 36:43)

அவன் நாடினால் நூஹ் நபியின் சமுதாயத்தை அழித்தது போல், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை அழித்தது போல் அழித்து விடுவான். இயற்கையின் ஆற்றல்களே அல்லாஹ்வின் வ­மை மிக்கப் படைகளாக அமைந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ­ல் மனிதன் அந்த இறைவனை அஞ்சி வாழக் கடமைப்பட்டுள்ளான். அந்த வகையில் சுனாமி பேரலைகள் இறந்தோருக்கு இறுதிக் கெடு! வாழ்பவர்களுக்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ்! அதுவும் புது விதமான வேதனை என்ற பரிணாமத்தில்!

இதிலும் நாம் திருந்தவில்லை என்றால், அல்லாஹ் நமக்கு ஓர் இறுதிக் கெடுவை நிர்ணயித்து விடுவான். அவ்வளவு தான்! அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணி

இங்கு நாம் இன்னொரு பாடத்தைப் பெறத் தவறி விடக் கூடாது. அது தான் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணி! சமுதாயத்தில் இறைவனுக்கு இணை வைக்கும் பாவம், வட்டி, விபச்சாரம், மது, சூது என்று பாவங்கள் நிறைந்து வழியும் போது நாம் வாளாவிருக்கக் கூடாது. அந்தத் தீமைகளை அழித்தொழிக்கும் போர் வாளாயிருக்க வேண்டும்.

கையால் தடுத்தல், வாயால் தடுத்தல், உள்ளத்தால் வெறுத்து ஒதுக்குதல் என்ற மூன்று வழிமுறைகளில் தீமைகளைத் தடுத்தாக வேண்டும். இல்லையேல் வரும் வேதனை, இவர்களெல்லாம் நல்லவர்கள்; தொழக் கூடியவர்கள்; மது அருந்த மாட்டார்கள்; விபச்சாரம் செய்ய மாட்டார்கள்; வட்டி வாங்க மாட்டார்கள் என்று நம்மை மட்டும் விட்டு விட்டு, தீயவர்களை மட்டும் பிடிக்காது. எல்லோரையும் சேர்த்தே பிடிக்கும்.

ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தோரை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 8:25)

அல்லாஹ்வின் இந்தக் கடுமையான வேதனை வரும் போது அவனைத் தவிர வேறு யாரும் உதவி செய்வதற்கு முன்வர மாட்டார்கள். அதனால் நாம் சமுதாயத்தில் நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே!

இந்தச் சோதனையி­ருந்து நாம் கற்க வேண்டிய பாடம் சோதிடத்தில் நம்பிக்கை கொள்வது பற்றியதாகும். மாற்று மத சமுதாயத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் சோதிடம் பார்க்காமல் செய்ய மாட்டார்கள். அதுபோல் முஸ்­ம்களும் ஹஜ்ரத்மார்கள், ஆ­ம்கள், ஷைகுகள், லெப்பைகள் ஆகியோரிடத்தில் ராசி போட்டுப் பார்க்காமல் செய்வதில்லை. இவையனைத்திலும் அல்லாஹ் வெறும் மண்ணை அல்ல! கடல் மண்ணை அள்ளிப் போட்டுள்ளான்.

நாளை என்ன? அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகின்றது என்பதை எந்தவொரு கொம்பனாலும் சொல்­ விட முடியாது என்பதை இந்த சுனாமி பேரலையின் பேரழிவு நிரூபித்துச் சென்றிருக்கின்றது. எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி மக்களை நீரில் இழுத்துப் போட்டுக் கொன்றிருக்கின்றது.

''வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 25:68)

''அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன் என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! ''குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 6:50)

''அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 7:188)

மறைவான ஞானம் தன்னுடைய தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கே இல்லை என்று மறுத்து விடுகின்றான். அப்படியானால் மற்றவர்களுக்கு எப்படி இருக்க முடியும்?

''பசிபிக் பெருங்கடல் ஓரமாக அமைந்த 26 நாடுகள் சுனாமி எச்சரிக்கை ஏற்பாட்டைச் செய்திருந்தன. இந்தியப் பெருங்கட­ல் அப்படி ஓர் ஏற்பாடு கிடையாது. அப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தால் சுமத்ரா அருகே கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டவுடனேயே தமிழகக் கரைகளில் எச்சரிக்கை செய்திருக்க முடியும். காரணம் இரண்டு மணி நேரம் இடைவெளி, அவகாசம் இருந்தது'' என்று 'சமுத்திரத்தி­ருந்து வந்த சாவு' என்ற தனது தலையங்கத்தில் 'இந்து' நாளேடு தெரிவித்திருந்தாலும், ''இந்த எச்சரிக்கை மையங்கள் கூறும் எச்சரிக்கைகள் எல்லாம், பு­லி வருகின்றது என்ற கதை தான், 75 சதவிகித சுனாமி எச்சரிக்கைகள் பொய்யாகிப் போயுள்ளன'' என்று தினமணி கூறுகின்றது.

மேலும் இந்தியப் பெருங்கட­ல் சுனாமி தன் வேலையைக் காட்டியதே இல்லை. அப்படியிருக்கும் போது இது போன்ற அபாயத்தை முன் கூட்டியே நாம் எதிர்பார்த்துத் தெரிவிப்பதற்குரிய வாய்ப்புகள் மிக அரிது தான். அப்படியே பசிபிக் கடலைப் போன்று இந்தியப் பெருங்கடல் அல்லது வங்கக் கட­ல் சுனாமி எச்சரிக்கை ஏற்பாட்டைச் செய்திருந்தாலும் அதையெல்லாம் துல்­லியமாக கருவிகளால் கண்டறிந்திட முடியாது என்பது தான் உலகம் இதுவரை கண்ட அனுபவமாகும்.

எனவே இந்தக் கருவிகளை நம்பி, பாவத்தில் மூழ்கி விடாமல் அவற்றை விட்டுத் திரும்பி, திருந்தி வாழ்வோமாக! source
Previous
Next Post »