சுன்னத் (?) ஜமாத்தின் இன்றைய கொள்கைக்கு எதிராக கருத்து சொல்லும் மத்ஹப்கள் !!
- அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் !
- அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு !
- அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்!
- இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்! அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் !
(நூல் : தப்ஸீர் குர்துபி 7: 54 வசனத்தின் விரிவுரை)
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு !
அல்லாஹ்விற்கு உருவம் உள்ளது என்ற கருத்து அல்குர்ஆன் 75 : 22, 23 மற்றும் புகாரி 7439, 4581 மற்றும் பல ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவனது தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள். இவ்வுலகில் யாரும் அவனுக்கு தோற்றம் கற்பிக்கக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் ”அவனைப் போல் எதுவும் இல்லை.” ”அவனுக்கு நிகராக யாருமில்லை”. இதுதான் உண்மையான இஸ்லாமியக் கொள்கையாகும். இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகும்.
அல்லாஹ்விற்கு கையும், முகமும், ஆன்மாவும் உள்ளது. தனக்கு முகம், கை, ஆன்மா இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் கூறியிருப்பது, (எப்படி என்று விளக்க முடியாகத வகையில்) விதமில்லாமல் அவனக்குரிய வர்ணைகளாகும். ” அல்லாஹ்வுடைய கை” என்பதற்கு ”அவனுடைய வல்லமை”. ”அவனுடைய அருள்” என்று கூறுவது கூடாது. ஏனெனில் இவ்வாறு விளக்கம் கொடுப்பது அவனுடைய வர்ணனைகளை அர்த்தமற்றதாக்குவதாகும். மேலும் இது கத்ரிய்யாக்கள், மற்றும் முஃதஸிலாக்களுடைய கூற்றாகும் என்று இமாம் அபூஹனீஃபா அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஹனபி மத்ஹப் நூல் : ஷரஹ் ஃபிக்ஹýல் அக்பர் பக்கம் : 43, 44, 45)
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்! நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)
இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள்! மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு : பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836.)
(பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ர) அவர்கள் ‘உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது (35: 22) மற்றும் ” உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது ” (27 : 80) ஆகிய வசனங்களை காட்டி மறுத்துள்ளார்கள்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 836)
EmoticonEmoticon