- தர்ஹா கட்டுவது கூடாது!
- கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்க வேண்டும்!
- கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்!
தர்ஹா கட்டுவது கூடாது!
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (இறைவனால்) படைக்கப்பட்டவரின் கப்ர் வணங்குமிடமாக ஆக்கப்படும் அளவிற்கு அது மதிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன். இவ்வாறு செய்பவனும், அவனுக்குப் பின்னால் வரும் மக்களும் குழப்பத்தில் சென்று விடுவார்கள் என்று (நான்) அஞ்சுவதே இதற்குக் காரணமாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல் முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
கட்டப்பட்ட தர்ஹாக்களை இடிக்க வேண்டும்!
கப்ரை பூசுவதும் , அதன் மீது கட்டிடம் எழுப்புவதும் , அதன்மீது அமர்வதும் , எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.
(ஷாஃபி மத்ஹப் நூல் : அல்முஹத்தப் பாகம் : 1 பக்கம் : 138)
கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்! கப்ரை முத்தமிடுவதும் கட்டியணைப்பதும் வெறுப்பிற்குரியதாகும். இறை நேசர்களின் ஜியாரத்திற்காக செல்லும் போது நிலைப்படிகளை முத்தமிடுவதும் வெறுப்பிற்குரியதாகும். இவை மக்கள் செய்து வருகின்ற பித்அத்தான காரியங்களாகும்
(ஷாஃபி மத்ஹப் நூல் : முக்னில் முஹ்தாஜ் பாகம் : 1 பக்கம் : 364 )
EmoticonEmoticon