1. கசையடிக்கு விசித்திரமான விளக்கம்
2 . அடுத்தவன் குழந்தை
3. இமாமின் தகுதிகள்:
4. இந்தியாவில் ஜும்ஆ
5. ஊரை அடித்து உலையில் போடலாம்
6. விசித்திரமான ஆராய்ச்சி1. கசையடிக்கு விசித்திரமான விளக்கம்
ஐம்பது குச்சிகளை ஒன்றாக இணைத்துக் கட்ட வேண்டும். ஐம்பது குச்சிகளும் அவனது மேனியில் படுமாறு இரண்டு தடவை குத்த வேண்டும். இவ்வாறு செய்தால் நூறு கசையடி அடித்ததாக ஆகிவிடும்.
2. அடுத்தவன் குழந்தை
ஒருவன் நான்கு ஆண்டுகள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அவள் கர்ப்பமுற்றால் அந்தக் குழந்தை அவனையே சேரும்.
(மஙானி பக்கம் 507)
3. இமாமின் தகுதிகள்:
அழகிய மனைவியை உடையவராக இமாம் இருக்க வேண்டும்
அவரது தலை பெரியதாகவும், உறுப்பு சிறியதாகவும் இருக்க வேண்டும். (துர்ருல் முக்தார்)
4. இந்தியாவில் ஜும்ஆ
மன்னரோ, மன்னரின் உத்தரவு பெற்றவரோ தவிர மற்றவர்கள் ஜும்ஆவை நடத்துவது செல்லாது.
ஹனபி மத்ஹபின் சட்டநூலான ஹிதாயா, முதல் பாகம், பக்கம் 168
பெரு நகரங்களில் தவிர மற்ற பகுதிகளில் ஜும்ஆ செல்லாது. எந்த ஊரில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றும் அமீரும், நீதிபதியும் உள்ளாரோ அதுவே பெருநகரமாகும்.
(அதே நூல், அதே பாகம், அதே பக்கம்)
5. ஊரை அடித்து உலையில் போடலாம்
பொது வழியை விற்பதும், அன்பளிப்பாக வழங்குவதும் செல்லும்.
(ஹிதாயா பாகம் 2, பக்கம் 4)
ஒரு மனிதன் தனக்கு உரிமையானதைத்தான் விற்க முடியும் உரிமையில்லாத எதனையும் எவரும் விற்க முடியாது, அறிவுடைய எந்த மனிதரும் இதை ஏற்கமட்டார். ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூல் விற்கலாம் எனக் கூறுகிறது,
6. விசித்திரமான ஆராய்ச்சி
ஹனபி மத்ஹபின் இமாம்களில் மூன்றாவது இடத்தை வகிக்கும் முஹம்மத் இமாமுடைய கருத்துப்படி யானை, பன்றியைப் போல் முழு நஜீஸாகும். இந்த விசித்திரமான சட்டம் ஹிதாயா பாகம் 2, பக்கம் 39ல் காணப்படுகிறது. இதற்கு என்ன ஆதாரம் என்பதை ஷரீஅத் பேரவை விளக்குமா?
இன்னுமா இந்த மத்ஹபு சாக்கடையை தூக்கி பிடிக்கிறீர்கள்??
2 comments
Write commentsநீங்கள் சொல்வது எதயும் நம்பும் படியாக இல்லை இவ்வளவு கேவலமாகவா மதுஹபு சட்டங்கள் இருக்கும் ? மதுஹபு நூல்கள் கிடைத்தால் படித்து மற்ற வார்களுக்கும் எடுத்து சொல்லலாம். ஆதாரம் இல்லாமல் பேச முடியாது
ReplyEmail : shafidgl@gmail.com
15 ஆண்டுகளுக்கு முன்பாக இவை அனைத்திற்கும் பதில் அழிக்கப்பட்டுவிட்டது. இன்னும் இதை பதிவு செய்வது சத்தியத்திற்கு மாற்றம் இல்லையா? இதில் தலைப்பு வேற "சத்தியத்தை தயங்காமல் எடுத்து உரைப்போம்".
ReplyEmoticonEmoticon