சமுக நலம் காக்கும் சுமுக மார்க்கம் -பாகம்01

                                  இறைவனின் திருப்பெயரால்...

இஸ்லாம் என்றாலே அது ஒரு பங்கரவாத மார்க்கம் அது ஒரு தீவிரவாத மார்க்கம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை தான் ஊடகங்கள் திட்ட மிட்டு பரப்பி வருகின்றன அனால் இஸ்லாம் மனித சமுகத்தின் நலன் காக்கும் ஒரு சுமுக மார்க்கம் ஆகும்
இஸ்லாத்தின் மனிதநேயம்   பற்றிய ஒரு சிலவற்றை உங்களுடன் பகிருகிறேன்.
மனிதன் ஒரு சமுக பிராணி நீர் வாழ பிராணி நீர் இன்றி வாழ முடியாதது போல் சமுகம் சமுதயாமின்றி மனிதனால் வாழ முடியாது
அப்படி இன்றி அமையாத சமுகத்தில் அவன் வாழும் போது தான் சக மனிதனிடம் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? 
தன்னை சார்ந்து நிற்கின்ற பிராணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
தன் சுற்றுப்புற சுழலை எப்படி வைத்து கொள்ள வேண்டும்.என்ற ஒரு தெளிவான வழிகாட்டலை இஸ்லாம் வழங்குகிறது.

இப்போது அந்த வழிகாட்டலை பார்ப்போம்.


பிறர் நலம் பேணுபவரே முஸ்லிம் 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
அறிவிப்பவர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள நூல்:-புஹாரி 10

 தனக்கு உள்ளதை பிறருக்கு விரும்புபவரே முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர்:- அனஸ் (ரலி) அவர்கள்.
நூல்:-புஹாரி 13

மனைவியின் நலம் பேணுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.
அறிவிப்பவர்:- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள்
நூல்:-புஹாரி 56 

எச்சில் இலையில் மிச்சத்தை சாப்பிடுபவள் தான் மனைவி என்ற அடிமை தனத்தை மனிதநேய மார்க்கமான இஸ்லாம் உடைத்து எரிகிறது.

 பிள்ளைகள் நலம் பேணுதல்

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள். 
அறிவிப்பவர்:-ஆயிஷா(ரலி)
நூல் :-புஹாரி 5998   
  
பிள்ளைகளை கொஞ்சி முத்த மழை பொழியாதவர்களுக்கு இறைவனின் அருள் மழை பொழியாது என்று கூறுகின்றது இஸ்லாம்.

பெற்றோர்  நலம் பேணுதல்
 
'ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)' என்றார்கள்.
அறிவிப்பவர்:-அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
 நூல் :-புஹாரி 5973 

தமது பெற்றோரை பிறர் திட்டுவதற்கு நாம் கரணம் ஆவதே பெரும் பாவம் என்றால் பெற்றோரை நாமே நேரடியாக திட்டும் பாவத்தின் பரிமாணத்தை அளவிடவே முடியாது 

அண்டை வீட்டாரின்  நலம் பேணுதல்

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 
 எவருடைய நாச வேலையிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்ப்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்.
 அறிவிப்பவர்:-அபூஹுரைரா  (ரலி)
 நூல் :-முஸ்லிம் 

அண்டைவீட்டுக்காரரிடம் தடையின்மை சான்றிதழ் பெறாதவர் சொர்க்கம் செல்ல முடியாது.

புன்முறுவல் ஒரு புண்ணிய தர்மம் 

என்னிடம் நபி (ஸல்) அவர்கள் "நல்லறங்களில் எதையும் அற்பமாக கருதாதிர்;உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே"என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர்:-அபூ தர்  (ரலி)
 நூல் :-முஸ்லிம்  5122

 மென்மையே மேன்மை 

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மேன்மை எதில் இருந்தாலும் அதை அது  அழகாக்கி  விடும் .மேன்மை  அகற்றப்பட்ட எந்த ஒன்றும்  அலங்கோலமாகிவிடும் .
 அறிவிப்பவர்:-நபி (ஸல் )அவர்களின் துணைவியார் ஆயிஷா  (ரலி)
 நூல் :-முஸ்லிம்  5056 

வதை செய்தவன் வதைக்கப்படுவான்

ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரை கடந்து சென்றார்கள். அம்மக்களின் தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு  வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள்"என்ன இது ?"என்று கேட்டார்கள்."கராஜ் (வரி செலுத்தாது ) தொடர்பாக தண்டிக்கப்படுகிறார்கள்"என்று சொல்லப்பட்டது.
அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள்,"அறிக! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள்,இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி )வேதனை செய்பவர்களை அல்லா வேதனை செய்வான் 'என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் "என்றார்கள்.
அறிவிப்பவர்:-உர்வா பின்  அஸ்ஸுபைர் (ரலி)
 நூல் :-புஹாரி 

இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ்......





Previous
Next Post »