இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதர, சகோதரரிகளே மேற்கண்ட தலைப்பை படித்தவுடன் ஒரு நிமிடம் நீங்கள் மிரண்டுவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ்! (அல்ஹம்துலில்லாஹ்)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது மனைவியையும் தனது பிள்ளையையும் சுடும் பாலைவன மணலில் தவிக்க விட்டார் பின்னர் அல்லாஹ் விடமிருந்து கட்டளை வந்ததும் மீட்டுவந்தார், அடுத்ததாக  அல்லாஹ்வின் மற்றொரு கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனை அறுத்து பலியிட துணிந்தார் இறுதியாக அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் பலி பிராணியை அறுத்து தன் மகனை மீட்டார்! இப்படிப்பட்ட மாநபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்தான் இஸ்லாம் அதனை பின்பற்றக் கூடியவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் இந்த மாநபியும் இவருக்கு பின்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும்  இறுதியாக வந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றும் முஸ்லிம்களாக நாம் இன்று வாழந்து வருகிறோமா?

உறுதியான ஈமான் கொண்ட நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுவதை நீங்கள் மறைமுகமாக புறக்கணித்து வாழ்கிறீர்கள் ஆம் பிறை விஷயத்தில் நீங்கள் வழிதவிறிவிட்டீர்கள் நீங்கள் உங்கள் மனோ இச்சையைத்தான் பின்பற்றி வாழ்கிறீர்கள்! இது ஒன்றே போதும் நீங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவர் என்பதற்கு!

வாருங்கள் உங்கள் மனோ இச்சையை எடைபோடுவோம்
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (குர்ஆன் 8:20)

அன்புச் சகோதரர்களே அல்லாஹ் இங்கு இந்த வசனத்தை காஃபிர்களையோ இணைவைப்பாளர்களையோ விழித்து கூறாமல் மூமின்களே என்று கண்ணியமான முறையில் அறிவுறை கூறுகிறான்.

மூமின்கள்தானே படைத்த இறைவனுக்கு எதையும் இணை வைக்காமல் வாழ்ந்து மடிகிறார்கள் ஆனால் அவர்களில் எத்தனைபேர் இணையில்லாத அந்த இறைவனுடைய தூதருக்கு கீழ்படிகிறார்கள்! சிந்திக்கமாட்டீர்களா?

குர்ஆனை ஓழுங்காக ஓதுவோம், அதனை பொருளுணர்ந்து படிப்போம் பிறருக்கும் எத்திவைப்போம் ஆதாரங்கள் நிறைந்த ஹதீஸ்களின் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் என்று சத்திய முழக்கமிடும் தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்கள் ரமலான் மற்றும் ஈதுல்-அல்ஹா பெருநாட்கள் வந்துவிட்டால் தரம்புரண்டு விடுகிறார்களே!

பெருநாள் என்ற அந்த இனிய நாட்களில் மட்டும் தங்கள் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு குர்ஆனை ஓரம் தள்ளிவிட்டு, நபிவழியை புறக்கணித்துவிட்டு நவீன விஞ்ஞானம், ஆன்லைன் பிறை என்ற தங்கள் மனம் போன போக்கில் பெருநாள் கொண்டாடி மகிழ்கிறார்களே இவர்கள் கீழ்கண்ட நபிமொழியை புறக்கணிப் பதேனோ?
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நூல்கள்: புகாரி, அஹ்மத்)

மாநபியும் விஞ்ஞான அறிவிப்பும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரன் பிளந்தது என்ற உண்மையை உலகிற்கு காட்டித்தந்தவர் அல்லவா? ஆதாரம் இதோ!
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.
இந்த மாநபி நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்துவிடும் அன்றைய தினம் உங்கள் இஷ்டம் போல் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கலாமே ஏன் அவ்வாறு அறிவுறுத்தவில்லை?

மாநபியும் பிறை பற்றிய அறிவிப்பும்
கண்ணியமிக்க எங்கள் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறைகள் நோன்புகள் பற்றி என்ன கூறினார்கள்?
ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

மாநபியும் மாதங்கள் பற்றிய அறிவிப்பும்
எங்கள் உம்மி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மாதங்களை எவ்வாறு தீர்மானிக்க அறிவுறுத்தினார்கள் மறந்துவிட்டதா? ஆதாரம் இதோ
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).

மாதங்கள் பிறைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்றுதானே நபிகளார் அறிவுறுத்தியிருக்கிறார்கள் அதை மறந்து விட்டு ஆயிரம் வருடங்களுக்கு நாங்கள் காலண்டர்களை கணித்து கூறுவோம் என்று ஜோசியக்காரர்களை போன்று நம்மில் தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு போன காரணம் என்னவோ? ஏன் நபிமொழிகள் கேட்டு கேட்டு உள்ளம் புளித்து போய்விட்டதா?

இந்த வசனம் இந்த விஞ்ஞான காலத்திற்கு பொருந்தாதா?
கண்ணியமிக்க சகோதரர்களே படைத்த இறைவன் முற்றும் அறிந்தவன் அவன் விஞ்ஞான வளர்ச்சியையும் அறிந்தவன் அவனே அதை நமக்கு கற்றுத்தருபவன். அவன் நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும் எனவே பிறைகளை மக்களே கணிக்கலாம் என்று சட்டம் வகுத்திருக்கலாம் அப்படி சட்டம் வகுத்து தருவது அவனுக்கு சிரமமானதல்ல ஆனால் அவன் கீழ்கண்டவாறு தான் சட்டம் வகுத்துள்ளான்!
உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

ஆனால் இன்றைய மக்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் நாங்கள் அறிவியல் வல்லுனர்கள் என்று மார்தட்டிக்கொண்டு மேற்கண்ட வசனத்தை மறக்கடிக்கிறார்கள்! உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று இறைவன் கூறும் இந்த செய்தி இந்த விஞ்ஞான சாட்டிலைட் காலத்திற்கு பொருந்தாத வசனமா? அப்படியானால் உங்களில் இந்த வசனம் தேவையில்லை என்று கூற முன்வருபவர் யார்? நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையானவராக இருந்தால் இந்த சவாலை ஏற்று வாருங்கள் பார்ப்போம்! அல்குர்ஆனுடைய வசனமாகிய 2:185 இந்த காலத்திற்கு தேவைப்படாது, காலத்துக்கு முரண்பட்டது என்று கூற உங்களில் எவனுக்கேனும் திராணியிருக்கா? ஒருவராவது கையை உயர்த்துங்கள் பார்ப்போம்!

தரம்புரண்ட தவ்ஹீத் கொள்கை சகோதரர்கள்
இன்றைய நவீன விஞ்ஞான காலத்தில் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது அவர்கள் கூறுகிறார்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட தீர்மானம் வகுத்தால் நாங்களும் அவர்களுடன் உடன்படுகிறோம் என்று! இவர்கள் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர்கள்தான் ஆனால் கொள்கையில் தடம் புரண்டவர்கள். தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த கொள்கைவாதிகள் நாளை கீழ்கண்டவாறுகூட கூற முன்வருவார்களா?
உலகம் முழுவதும் நபிவழியை புறக்கணித்தால் நாங்களும் புறக்கணிப்போம்
தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த தரம்கெட்ட கொள்கைவாதிகளிடம் நாம் கேட்கும் கேள்விகள் இதுதான்!

  1. பிறையை தீர்மானிப்பது நபிவழியின் அடிப்படையிலா? அல்லது உலக மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?

  1. அருள்மறை குர்ஆனை பின்பற்றுவது 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) என்ற யாரோ ஒருவர் வாழ்ந்தாராமே அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையிலா? அல்லது தற்போது நம்முடன் வாழந்துக் கொண்டிருக்கும், வாழப்போகும் 600 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?

  1. உலகம் முழுவதும் ஒன்று கூட இனி எங்களுக்கு குர்ஆன் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?

  1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹராமை ஹலால் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?

  1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹலாலை ஹராம் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?

நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுவதை மறுத்து உலகப்பிறைக்கு வக்காலத்து வாங்க துடிக்கும் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல மாறாக தவ்ஹீதில் தடம்புரண்ட தருதலைவாதிகள்! இவர்கள் இறைவனுக்கும் அவனது தூதர்களுக்கும் கட்டுப்படுவதை காட்டிலும் 600 கோடி மக்களின் மனோ இச்சைக்கு கட்டுப்பட துடிக்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது அல்லாஹ்தான் இவர்களை திடப்படுத்த வேண்டும்!

ஒருவேளை உலகில் வாழும் 600 கோடி மக்களும் அல்லாஹ்வை வணங்குவதை வெறுத்தால் அவர்களின் மனோ இச்சைக்கும் இவர்கள் கட்டுப்படுவார்களா? இதோ இவர்களி்ன செயல் கீழ்கண்ட இறைவசனத்தை நினைவுபடுத்தவில்லையோ!

(நபியே! இன்னும்) நீர் கூறும்: அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (குர்ஆன் 3:32)

கொள்கையை விட குடும்பம்தான் முக்கியமா?
அன்புச் சகோதர, சகோதரிகளே இன்று இந்த பிறை விஷயத்தில் நாம் போராடுவது உன்னதமான அந்த நபிவழியை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆனால் ஒரே நாள் உலகம் முழுவதும் பிறை என்ற வாதிடுபவர்கள் எதற்காக இந்த கொள்கையை விடுகிறார்கள் தெரியுமா? காரணங்கள் இதோ!

1.       சவுதி, துபாய் நாடுகளில் வாழும் மகன் தான் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தன் தாயும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!

2.       தாய்நாட்டில் வசிக்கும் சகோதரனோ வெளிநாடுகளில் வாழும் தன் சகோதரன் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தானும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!

3.       தாய்நாட்டில் வசிக்கும் மக்கள் சவுதி மக்களை பார்த்து  இன்று அவர்கள் பெருநாள்  கொண்டாடும் போது நாம் இன்று சொந்த நாட்டில் திண்டாட வேண்டுமா? என்று பதறுகிறார்கள்!

4.       வெளிநாட்டுவாழ் மக்களோ இன்று நாங்கள் பெருநாள்  கொண்டாடி விட்டோம் எங்களைப் போன்று மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ஏன் பெருநாள் கொண்டாடவில்லை என்ற புலம்புகிறார்கள்!

குடும்ப உறுப்பினர்களிடம் அளவுகடந்த பாசம் வைக்கும் மேற்கண்ட நபர்களிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான்! உங்களை பெற்ற தாய், வளர்த்த தந்தை, உடன் பிறந்த சகோதரன், சகோதரி, கட்டிய மனைவி, பெற்றெடுத்த மகன், மகள் ஆகியோர் அல்லாஹ்வையும் அவனது நபியையும் விட சிறந்தவர்களா? உங்கள் நேசம் உங்கள் குடும்பத்தாருடன்தானா? அப்படியானல் உங்கள் குடும்பத்தாரின் மீது நேசம் காட்டுவதற்காக வேண்டி கீழ்க்ணட வசனத்தை குர்ஆனிலிருந்து நீக்கிவிடலாமா?

நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்” (திருக்குர்ஆன், 3:31)

வாருங்கள் உங்களில் யார் உங்கள் குடும்பத்தாரையும் விட  அல்லாஹ்வை அதிகம் நேசிக்க முன்வருகிறார்கள் என்பதை நாமும் பார்க்கிறோம்!

நீங்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நேசித்திருந்தால் அவருடய நபியை பின்பற்றி பெருநாள் கொண்டாட வேண்டுமே ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நேசிப்பதை விட உங்களுடைய வெளிநாட்டுவாழ் சகோதர, சகோதரிகளையும், தாய்நாட்டுவாழ் தாய் தந்தையரும்தானே நேசமுள்ளவர்ளாக இருக்கிறார்கள்! இதனால்தானே நபிவழியை புறக்கணிக்கிறீர்கள்!

(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும். (அல்குர்ஆன் 6:106)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (அல்குர்அன் 8:20)

மத்யன் நகர மக்களும் ஷுஐப் நபியும் படிப்பினை
இந்த பிறை விஷயத்தில் விஞ்ஞானத்தை பின்பற்றும் நீங்கள் தரம்புரண்டுவிட்டீர்கள் உங்களைப் போன்றே அளவை நிறுவைகளில் தரம்புரண்ட ஒரு சமூகத்தை பற்றி அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

மதயன் நகர மக்களை அளவை நிறுவைகளில் மோசடி செய்து வந்தார்கள் அவர்களை நேர்வழிப்படுத்த அவர்களின் சகோதரரும் நபியுமாகிய ஷுஐப் (அலை) அவர்கள் வருகிறார்கள். அவர் தன் சமூகத்தாரிடம் கூறுகிறார் இதோ

“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். (அல்குர்ஆன் 11:85)

ஷுஐப் நபியின் வரலாற்றை நாம் கூறுவது உங்களுக்கு பொருத்தமில்லாதவையாக தென்படலாம் ஆனால் இதிலும் படிப்பினை உள்ளது! அளவை நிறுவைகளை அறியாத சமுதாயதவர்கள் அதுபற்றி அறிந்துக்கொள்கிறார்கள் பின்னர் அவைகளில் மோசடி செய்கிறார்கள் இதை கண்டிக்கும் போது கூடவே பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள் என்று நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் அதற்க அந்த மக்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? இதோ

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (அல்குர்ஆன் 11:87)

இப்படிப்பட்ட ஏளனமான வார்த்தைகளைத் தான் இன்று உலகப் பிறை ஒரே பெருநாள் என்று கர்ஜிக்கக்கூடிய சகோதரர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கூற வேண்டிய பதிலையும் நபி ஷுஐப் நமக்க கற்றுத்தருகிறார் இதோ ஆதாரம்

(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (அல்குர்ஆன் 11:88)

உலகப் பிறை என்று வாதிடக்கூடியவர்களிடம் நாம் ஆதாரங்களை காட்டினால் அதை நிராகரித்து மத்யன் நகரவாசிகள் எவ்வாறு நபி ஷுஐப் அவர்களை இகழ்ந்தார்களோ அதைப்போன்று இவர்களும் நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுபவர்களையும் அதை அறிவுறுத்து பவர்களையும் இகழ்கிறார்கள் இதோ ஆதாரம்

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 11:91)
நபி ஷுஐப் அவர்கள் கூட குடும்பத்தாரைவிட அல்லாஹ் வைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும் என்று கூறுகிறார்
(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான். (அல்குர்ஆன் 11:92)

நபிக்கு கட்டுப்படாதவர்களுக்கு கட்டுப்படுதல் இல்லை!
என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:93)

எனவே சகோதரர்களே ஷுஐப் நபியின் மேற்கண்ட கருத்தையே நாமும் கூறுகிறோம் நீங்க்ள உங்களுக்கு இசைந்தாவறு செய்து கொண்டிருங்கள் நபிவழியில் பெருநாள் கொண்டாடுபவர்களான நாங்களும் நபிவழிக்கு இசைந்தவாறு பெருநாள் கொ்ணடாடு கிறோம். நம்மில் இழிவுதரம் வேதனை யாருக்கு வந்தடையும் என்பதையும், நம்மில் பொய்யர் நீங்களா, நாமா? என்பதை  மஹ்ஷரில் அல்லாஹ்வின் சமூகத்தில் அறிந்துக்கொள்வோம் வாருங்கள்! ஒரு வேளை இந்த உலகமே எங்களுக்கு எதிராக அணிதிரண்டு நின்றாலும் தவ்ஹீத் என்ற ஏகத்துவக் கொள்கையிலும் நபிவழயில் தொழுகைகள், ஜகாத், ஹஜ், உம்ரா, குர்பானி, பெருநாட்கள் மற்றும் ஏவைகள் எல்லாம் எங்கள் இறைவன் எங்கள் மீது கடமையாக்கியுள்ளானோ அவைகளை குர்ஆன் மற்றும் நபிவழியில்தான் பின்பற்றுவோம்! எங்கள் இறைவனுக்கு நாங்கள் மாறு செய்யமாட்டோம் எங்கள் நபியின் வழியை கைவிடமாட்டோம்! நாங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழுவோம் அதே நிலையில் மரணிக்கவும் செய்வோம் (இன்ஷா அல்லாஹ்)!

இதோ உங்களுக்கு இறுதியாக உபதேசம் செய்கிறோம்!
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:92)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? உங்கள் கொள்கை சரியா?
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர். (அல்குர்ஆன் 11:944)

அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட சகோதரர்களே நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை ஒழுங்காக பின்பற்ற துடிக்கும் நீங்கள் பிறை விஷயத்தில் தரம்புரண்டுவிடாதீர்கள், சோதிடக்காரனிடம் சென்று நல்ல நாள் பற்றி குறிகேட்பதும் ஒன்றுதான் 1000 வருடங்களுக்கு ஹிஜிரா காலண்டரை தயாரித்து பெருநாள் தொழுகைகளை விஞ்ஞான கணிப்பின் அடிப்படையில் முன்கூட்டியே தீர்மானிப்பதும் ஒன்றுதான்.

எனவே இப்படிப்பட்ட பிறை சோதிடர்களை நம்பி உங்கள் ஈமானை அல்லாஹ்வின் சமூகத்தில் கேள்விக்குறியதாக ஆக்கிவிடாதீர்கள்! இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை புறக்கணித்துவிடாதீர்கள்!

நீங்கள் நபிவழியை புறக்கணித்து மனோ இச்சையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிம் கொண்டால் அது அல்லாஹ்வை தவிர்த்து கப்ருகளையும், சிலைகளையும் வணங்கக்கூடிய காஃபிர்கள், முஷ்ரிக்குகள், முனாஃபிக்குகளின் தீர்மானங்களை ஒத்த தீர்மானமாகும்! எனவே சகோதர, சகோதரிகளே நீங்கள் மஹ்ஷரில் மூமின்களாக இப்ராஹீம் நபி போன்ற நல்ல கூட்டத்தாரோடு நிற்க ஆசைப்பட்டால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் (நபிவழி)யை உறுதியாக பின்பற்றித்தான் ஆகவேண்டும் இதைவிட உங்களுக்கு வேறு வழி இல்லை! THERE IS NO OPTION TO PROHIBIT QUR’AN & SUNNAH இதோ ஆதாரம்!
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். (அல்குர்ஆன் 2:130)

இந்த குர்ஆன் மற்றும் நபிவழியை புறக்கணிக்காதீர்கள்
நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:57)
விஞ்ஞான பிறையை கணிக்கும் விஞ்ஞானிகளே நபிவழியை புறக்கணிக்காதீர்கள்! தரம்புரண்ட நீங்கள் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்

لا اله الا الله محمد رسول الله

                                                                                                            -சிராஜ் அப்துல்லாஹ்

Previous
Next Post »