கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு. ஓர் அவசர அலசல்.



உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் மிகவும் பரபரப்பாகவும், மும்முரமாகவும் உலகம் முழுவதும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது.

இந் நிகழ்கால நிகழ்வுகளில் கிரிகெட் பற்றிய உண்மைத் தகவல்களையும், அதனால் ஏற்படும், தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களையும் பற்றி தெளிவாக உணர்த்துவதற்காக இந்த கட்டுரை வரையப் படுகிறது.

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு.

ஒரு விளையாட்டாக இருந்தால் அந்த விளையாட்டை விளையாடுவதின் மூலம் உடலுக்கு ஒரு பயிற்சி கிடைக்க வேண்டும். ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு அந்த விளையாட்டு ஒரு நன்மையைத் தர வேண்டும் எந்த நன்மையும் இல்லாத விளையாட்டை விளையாட்டுக்கள் பட்டியலில் சேர்பதே ஒரு சிறந்த சிந்தனையாளரின் பண்பாக இருக்க முடியாது.

11 பேர்கள் விளையாட பல கோடி மக்கள் அந்த விளையாட்டை பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள்(?) விளையாடுவது 11 பேர்தான் அதிலும் அவர்களுக்குக் கூட அந்த விளையாட்டினால் எந்த நன்மையும் இல்லை இதே நேரத்தில் அதைப் பார்க்கும் பல கோடி மக்களும் தங்கள் நேர காலத்தை வீனாக்கி தீமையை சம்பாதிப்பதுதான் கவலையான விஷயம்.

வாழ்க்கையாகிவிட்ட கிரிகெட் விளையாட்டு(?)

ஒரு விளையாட்டென்ரால் அது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாக இருக்களாம். அதனால் உடலுக்கும் உள வளத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்களாம்.

வியர்வை வெளியாகுதல், ஓடி ஆடித் திரிவதின் மூலம் இரத்த ஓட்டம் சீராக அமைதல் போன்றவற்றால் மிகப் பெரிய உடலியல் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்களாம்.

ஆனால் இந்த கிரிகெட் விளையாட்டைப் பொருத்த வரையில் வாழ்க்கையில் விளையாட்டும் ஒரு பகுதி என்பது போய் வாழ்க்கையே விளையாட்டாகிவிட்டதுதான் கவலையான செய்தியாகும்.

கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் தொழிலாக கிரிகெட் இருக்கிறது.

அவர்கள் விளையாடினால் அவா்களுக்கு பணம் கிடைக்கிறது.

இதே நேரம் அதை இரவு, பகலாக கண் விளித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு என்ன கிடைக்கிறது? நோய் தான் மிச்சமாகிறது.

இன்றைக்கு கிரிகெட்டே பலருடைய வாழ்க்கை என்றாகிவிட்டது.

இதனால் சமுதாயத்தில் பொது மக்களுக்கு மத்தியில் பலதரப் பட்ட பிரச்சினைகளும் சிக்கள்களும் உருவெடுத்துள்ளதையும் யாரும் மறுக்க முடியாது.

நேரத்தை விரயப் படுத்தும் வீன் விளையாட்டு.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நேரம் என்பது மிகவும் முக்கியமானது.அதிலும் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையில் நேரம் என்பது அவனுடைய உயிருக்கு நிகரானது. காலம் பொன் போன்றது என்பார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்தவரை காலம் பொன்னை விட மேலானது உயிரைப் போன்றது.

உயிர் போனால் எப்படி திரும்பப் பெர முடியாதோ அது போல் காலம் கடந்து விட்டால் அதனை நாம் திரும்பப் பெற முடியாது. பொன்னை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் நேரத்தை சம்பாதிக்க முடியாது.

கடைசி நேரத்தில் பரீட்சையை தவர விட்டவனிடம் நேரத்தின் மகிமையைக் கேட்டுப் பார்க்கச் சொல்வார்கள் நேரம் என்பது எவ்வளவு தேவையான முக்கியமாக விஷயம் என்பதை அவன் சொல்லுவான்.

ஆனால் இந்த கிரிக்கெட் விளையாட்டினால் எந்தளவுக்கு நேர விரையம் ஏற்பட்டாலும் நம் சகோதரர்கள் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.

ஒரு நாள் ஆட்டம், மூன்று நாள் முக்கோணத் தொடர், டெஸ்ட் ஆட்டம், உலகக் கிண்ணம், ஆசியாக் கிண்ணம், என்று எத்தனையோ பெயர்களின் கால விரையம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆட்டம் என்று சொல்லி அந்த விளையாட்டை விளையாடுபவர்களுக்கு ஒரு நாள் ஆட்டத்தில் சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அதனைப் பார்ப்பதற்காக டி.விக்கு முன் குந்தியிருப்பவர்களுக்கு என்ன பயன் ஏற்படுகிறது? நேர, கால, மின்சார , உடல் சக்தி விரையம் இதுதான் மிச்சம்.

அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இவ்வாறு பேசுகிறான்.

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் இழப்பில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொருமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(103 - 1-3)

இறைவன் ஒரு பொருளின் மீது அல்லது ஒரு விஷயத்தின் மீது சத்தியமிட்டால் அந்த விஷயத்திற்கு அல்லது அந்தப் பொருளுக்கு அதிகமான மதிப்பும் மரியாதையும் உண்டென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட திருமறை அத்தியாத்தின் முதல் வசனத்திலேயே இறைவன் காலத்தின் மீது சத்தியம் செய்கிறான். காலத்தின் மீது இறைவனே சத்தியம் செய்து சொல்கிறான் என்றால் நேர காலம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதே போல் காலத்தின் மேல் சத்தியம் செய்துவிட்டு. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து, பொருமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் நஷ்டத்தில் தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறான்.

நேரத்தை நமது இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக ஆக்க வேண்டுமே தவிர பாழாக்கக் கூடாது என்பதில் இஸ்லாம் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது.

மறுமை நாளில் இறைவனின் விசாரனையைப் பற்றி நபியவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

வாழ்நாளைக் கழித்த விதம், கற்ற கல்வியின் படி நடந்த விதம், பொருளைச் சம்பாதித்து அதனை செலவு செய்த விதம், உடலை அழித்த விதம் ஆகியவை பற்றி ஓர் அடியான் மறுமையில் விசாரிக்கப் படாத வரை அவனுடைய கால்கள் அவ்விடத்தை விட்டும் நகராக என்று நபியவர்கள் கூறினார்கள். ( திர்மிதி – 2341 தாரமீ – 536 )

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் வாழ்நாளைக் கழித்த விதம் பற்றி விசாரிக்கப்படும் போது நல்ல முறையில் கழித்ததாக பதில் சொல்லிவிட்டால் அவன் மறுமையில் வெற்றி பெற்றவனின் பட்டியலில் சேர்ந்து விடுவான். ஆனால் இந்த கிரிக்கெட் மோகத்தினால் நிறையைப் பேர் அவா்களுடைய வாழ் நாளை வீனாக கழிக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் மறுமையில் தங்கள் நிலை என்னவாகப் போகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள் வேண்டும்.

நபியவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் தரி கெட்ட விளையாட்டுக்களிலும் வீன் பொழுது போக்கான அம்சங்களிலும் ஈடுபடுபவர்கள் மறுமை நாளின் எந்த நிலையில் இருப்பார்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா நான் விட்டு வந்ததில் (வாழ் நாளில்) நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான். அவ்வாரில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான்.அவா்கள் உயிர்பிக்கப் படும் நாள் வரை அவா்களுக்குப் பின்னால் திறை உள்ளது. (23 – 99-100)

உலகத்தில் உள்ள வீனான காரியங்களில் நாம் வாழும் காலத்தில் மூழ்கி இருந்துவிட்டு மரணித்ததின் பின்னால் இறைவனிடம் மன்றாடுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

முஃமின்கள் எப்படி இருப்பார்கள்?

உண்மையான ஒரு முஃமின் தனது வாழ்க்கையில் வீனான காரியங்களில் ஈடுபடாமல் தன்னைக் காத்துக் கொள்வான். வீனான காரியங்களில் ஈடுபடுபவர்கள் உண்மையில் முஃமின்களாக இருக்கவே முடியாது.

இறைவன் முஃமின்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போதுஅவா்கள் வீனானதைப் புறக்கணிப்பார்கள்(23-3) என்று குறிப்பிடுகிறான்.

உண்மையில் கிரிகெட் போன்ற இந்த வீனான விளையாட்டுக்களை புறக்கணிப்பவர்கள் மாத்திரம் தான் உண்மையான முஃமின்களாக இருக்க முடியும் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டும், முஸ்லீம்களின் வணக்க வழிபாடுகளும்.

கிரிக்கெட் மீது ஆழ்ந்த விருப்பமும், ஆசையும் கொண்டு கிரிக்கெட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அவா்களின் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

விளையாட்டு என்று வந்து விட்டால் தொழுகைக்கும் அவா்களுக்கும் தொடர்பின்றிப் போய்விடுகிறது. இரவு, பகலாக விளையாட்டில் மூழ்கியிருப்பார்கள் லுஹர் இல்லை, அசர் இல்லை, இரவு ஆட்டமாக இருந்தால் மஃரிப் இல்லை, இஷா இல்லை கேட்டால் விளையாட்டில் மும்முறமாம்?

என்னே விளக்கம் ?????????

தரி கெட்ட இந்த விளையாட்டை நேசித்து நாளை சுவர்க்கத்தை இழக்கும் நிலை தேவை தானா?

சில நேரங்களில் சிலர் சொல்லுவார்கள் முஸ்லீம் கிரிக்கெட் வீரர்கள் என்றால் அவா்கள் வணக்க விஷயத்தில் சரியாக இருப்பார்கள் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் உடனே அல்லாஹ்வைப் புகழ்வார்களாம்.

தொழுகையையே வேண்டுமென்று புறக்கணிக்கும் இவா்கள் மற்ற விஷயத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

ஒரு பவுன்டரி அடித்துவிட்டு அதற்காக மைதானத்தில் சுஜுது செய்துவிட்டால் நமது இஸ்லாமிய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வீரனை தனது ஆத்மீக குருவாகக் கூட ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஐந்து வேலைத் தொழுகைக்கு அவன் சுஜுது செய்யவில்லை என்பது அவா்களுக்குத் தெரியாது கடமையான ஜும்ஆவை அவன் விட்டு விட்டான் என்பது அவா்களின் கண்களுக்கு தென்படுவதில்லை.என்றாவது ஒரு நாள் மைதானத்தில் அவன் செய்த சுஜுதுக்காக மாத்திரம் அவனை தூக்கி தலையில் வைத்துக் கொள்கிறார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.(62-9)

இறை இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர்வணிகமோ வர்த்தகமோ அவா்களை அல்லாஹ்வின் நினைவைவிட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதைவிட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவா்கள் அஞ்சுவார்கள்.(24- 37)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உங்களை திசை திருப்பிவிட வேண்டாம்.இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள் (63-9)

மேற்கண்ட வசனங்களை ஒன்றுக்குப் பல முறை மீண்டும், மீண்டும் படித்துப் பாருங்கள். அந்த வசனங்கள் எவ்வளவு ஆழமான, அழகான அறிவுரைகளைக் கூறும் என்பது புரியும்.

இறைவனை நாம் எப்படி நினைக்க வேண்டும், இறைவனின் நினைவை விட்டும் நம்மைத் தடுக்கக் கூடியது எது என்பவைகளைப் பற்றி தெளிவான, அழகான, ஆழமான கருத்துக்களை இறைவன் அதிலே படித்துத் தருகிறான்.
நாம் எந்தக் காரணம் கொண்டும் இறைவனின் நினைவை விட்டும் நம்மைத் தூரமாக்கிக் கொள்ளக் கூடாது.

சூதாட்டமான கிரிக்கெட் விளையாட்டு (?)

விளையாட்டு என்ற பெயரில் ஆரம்பமான கிரிக்கெட்டின் இன்றைய நிலை என்னவெனில் முழுக்க முழுக்க சூதாட்டத்துடன் அது தொடர்பாக இருக்கிறது.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றி பேசப்படாத நாளே இல்லை. கிரிக்கெட் சூதாட்டம் இல்லாத நாடே இல்லை இதுதான் இன்றையை கிரிக்கெட்டின் லட்சனமாக இருக்கிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகளின் தலைவர்கள் தொடக்கம் அடிமட்ட ரசிகர்கள் வரை அனைவரும் இந்த சூதாட்டத்தில் பங்கெடுப்பதை யாரும் மறுக்க முடியாது.

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விளகிக் கொள்ள மாட்டீர்களா? (5-91)

கிரிக்கெட்டைப் பொருத்தவரை மேற்கண்ட அனைத்துத் தீமைகளும் கிரிக்கெட்டில் இருப்பதைப் பார்க்களாம்.

கிரிக்கெட் வீரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும், அதனோடு தொடர்பு படும் பெரும்பாலானவர்களும் மேற்கண்ட தீமைகளில் தங்களை இணைத்துக் கொள்வதை யாரும் மறுக்க முடியாது.

கிரிக்கெட் வீரர்களுக்காக மது பரிமாறப்படுகிறது. மதுவோடு அவா்கள் தொடர்புபடுகிறார்கள்.

சூதாட்டத்தில் தாராளமாக அவா்கள் பங்கு கொள்கிறார்கள். ரசிகர்களில் பெரும்பகுதியினரும் சூதாட்டத்தில் பங்கு கொள்கிறார்கள்.

இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களும், இதனை ஆதரிப்பவர்களும் தொழுகை விஷயத்தில் பொடுபோக்காகவே இருக்கிறார்கள் ( இது பற்றி முன்னனரே விபவரிக்கப்பட்டுள்ளது. )

அன்பின் சகோதரர்களே !

பெரியவர்களே !

இளைஞா்களே !

கல்வியாளர்களே !

இந்த வழிகெட்ட கிரிக்கெட் மோகத்தைவிட்டும் விலகி தூய்மையான, மார்க்கம் சொல்லித் தருகின்ற மார்க்கத்திற்கு முரனாகாத, உடல் அளவில் நன்மை தரக்கூடிய விளையாட்டுக்களை விளையாட்டாக குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் செயல்படுத்தி இம்மை, மறுமை வாழ்வில் வெற்றி பெருவோமாக!  


                               -நன்றி சகோ.RASMIN M.I.Sc
                      

Previous
Next Post »