இஸ்லாமிய சமுதாயமே சிந்தியுங்கள்!

தமிழகத்தில் தவ்ஹீத் கடந்து வந்த பாதை(ஆவண காப்பகம்)-02



இஸ்லாமிய சமுதாயமே சிந்தியுங்கள்..!

(என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் (2003) அமைப்பு ஆரம்பிக்கும் முன் தவ்ஹீத் பிரச்சார குழு என்ற பெயரில் செயல்படும் போது திருச்சி மாவட்டத்தின் சார்பாக (ஹானியா பிரிண்டர்ஸ்,சந்துகடை,திருச்சி-8.) விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்,)



....யார் அல்லாஹுவுக்கு இணை கற்பிக்கின்றாரோ  அவருக்கு,திண்ணமாக
அல்லாஹு சுவனத்தை ஹராமாக்கி விட்டான்.மேலும்,அவருடைய
இருப்பிடம் நரகமாகும். மேலும்,இத்தகைய அக்கிரமகாரார்களுக்கு உதவி
செய்வோர் யாருமில்லை.     (அல்குர்ஆன்-5:72)

....நீங்கள் அவர்களை(அவ்லியாவை)அழைத்தால் அவ்வழைப்பினை
அவர்களால் செவியேற்க முடியாது. மேலும்,செவியேற்றாலும் அவர்களால்
உங்களுக்கு எந்த பதிலையும் அளிக்க முடியாது. மேலும்,மறுமை நாளில்
உங்களுடைய இணைவைப்புச் செயலை அவர்கள் (அவ்லியா) ஏற்க மறுத்து விடுவார்கள். (அல்குர்ஆன்-35:14)
நம் நபி(ஸல்)கூறுவதையும் பாருங்கள் :

1.நல்லடியார்களின் கப்ருகளின் மீது கட்ட்டம் கட்டுவதும்,அதனை உயர்த்திக் கட்டுவதும் உடுமா?
யூத,கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்
போது அவனது கப்ரின் மீது ஒரு வணங்குமிட்த்தை கட்டி கொள்வார்கள், நாளடைவில் அதில் சில வடிவங்களைய்ம,அமைத்து கொள்வார்கள்.அல்லாஹ்விடம் இவர்களை மிக கெட்டவர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
 அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரலி)     ஆதாரம்:புஹாரி179

2.கூடு,கொடியேற்றம்,கந்தூரி போன்ற விழாக்கள் நட்த்துவது கூடுமா?
நீங்கள் எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்
என்று நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்ட்தாக அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்
  ஆதாரம்:அபூதாவூத்,பக்கம்286,பாகம்1
3.கப்ருக்கு ஸ்ஜ்தா செய்யலாமா?
நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று நபி(ஸல்)அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.அவ்வாறு நான் செய்ய மாட்டேன் என் நான் பதில் கூறினேன்.அதற்கு அவர்கள் ஆம்!கப்ருக்கு ஸஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள்
 அறிவிப்பவர்:கைஸிப்னு சயீத்(ரலி) ஆதாரம்:அபூதாவூத்,பக்கம்298,பாகம்1
இறையருள் வேண்டும் என்று அடக்கஸ்தலம் வந்து ஈமானை புதைத்து சமாதி ஆக்கி இறை நிராகரிப்புடன் திரும்பும் சமுதாயாமே! நடுநிலையடன் சிந்தித்து ஈமானை பாதுகாத்து கொள்ளுங்கள்,அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்
posted by : s.shahiduoli








Previous
Next Post »