நல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...01


                                   பிஸ்மில்லா  ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
             
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக முன்னர் வெளியிட்டு கொண்டிருந்த மாத இதழான முஸ்லிம் பெண்மனி (இப்போது தீன்குல பெண்மனி என்ற பெயரில் வெளிவருகிறது) என்ற இத்ழில் சகோதரி. K.M. செய்யது ரபியா ரோஷன் அவர்கள் எழுதிய கட்டுரை.

இதழ்:-மார்ச் 2002 துல்ஹஜ் 1422

துஆ என்பது ஓர் வணக்கமாகும்.    நபிமொழி.

அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷிர்  நூற்கள்: அபுதாவூத், நஸயீ, திர்மிதீ       

    துஆவை அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்கும் போது அது நல்லமலாக அமைந்து விடுகிறது. அதே நேரத்தில் அல்லாஹ் அல்லாதவரிடம் துஆக் கேட்டால் நல்லமலாக அமையாது. மாறாக நரகத்திற்கு இழுத்துச் செல்லும் தீய அமலாக மாறி விடும்.
   
        அல்லாஹ் கூறுகின்றான் உங்கள் இறைவன் கூறுகிறான். என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள். னான் உங் (கள் பிராத்தனை) களுக்கு பதிலளிக்கிறேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிருமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.                (அல்குர்ஆன் 40:60)

    
 சகல வல்லமை படைத்த அல்லாஹ் 
    நம்மை படைத்து பரிபக்குவப்படுதி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளான். இப்படியிருந்தும் அவனுக்கு நாம் மாறு செய்து விடுவதால் அவனை நெருங்க இயலாது என்றும் நேரடியாக பேசுவதற்கு நமக்கு எவ்வித்த் தகுதியும் கிடையாது என்றும் அவன் வானத்தில் இருப்பதால் நாம் கேட்பது அவனுக்கு விளங்காது என்றும் அவனிடம் முறையிட வேண்டும் என்றால் நல்லவர்களிடம் மன்றடித்  தான் கேட்க இயலும் என்றும் எண்ணுவதால் தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திக்கின்றார்கள். அல்லாஹ்வின் வல்லமையும் ஆற்றலையும் புரிந்து செயல்பட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்தி  நற்பயன் அடைந்து வெற்றியடைய இயலும்.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்ய ஒரு லாஜிக் கூறுகிறார்கள்.
தோசை சுட வேண்டும் என்றால் தோசை மாவும், அடுப்பும் இருந்தால் மட்டும் போதாது தோசை சுடும் கல் தேவை. தோசை மாவை அப்படியே அடுப்பில் ஊற்றினால் அது தோசையாக மாறாது. கருகி நாசமாகிவிடும்.
    
       அதுபோல அல்லாஹ்வை அடைய நேரடியாக செல்லக் கூடாது தோசைக் கல்லை எப்படி பயன்படுத்துகிறோமோ அது போல அவ்லியாக்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
    
      இவ்வுதாரணம் சரி என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் இன்னொரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நெருப்பில் நேரடியாக மாவை ஊற்றினால் தோசை கிடைக்காத்தோடு நெருப்பும் அணைந்து விடும். அப்படியானால் அவ்லியாக்கள் இல்லாமல் நேரிடையாக கேட்டால் அல்லஹ் அழிந்து விடுவானா? (நவூதுபில்லாஹ்). உதாரணமும் உருப்படியில்லை என்பதை கவனிக்க!
  
      அல்லாஹ் தன்னிடமே பிரார்த்திக்கச் சொல்கிறான். அதற்கு பதில் தருவதாகவும் கூறுகிறான். அப்படியிருக்க ஏன் அடுத்தவரிடம் துஆ கேட்க வேண்டும்.
   
   ‘‘(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன்.அவர்கள் என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அவர்கள் நேர்வழியடைவார்கள் (எனக் கூறுவீராக)                                                         (அல்குர்ஆன் 2:186)      

          பிடறி நரம்பை விட சமீபமாக அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ் கூறுகின்றான்.
  
       ‘‘நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடறி நரம்பை விட அவனுக்கு மிக அருகில் நாம் இருக்கிறோம்.                                                      (அல்குர்ஆன் 50:16)
   

       நாம் பாவம் செய்தால் அல்லாஹ் துஆவை ஏற்க மாட்டான். எனவே தான் அவ்லியாக்களிடம் செல்கிறோம் என்பவர்களுக்கு அல்லாஹ் தரும் பதில்: 
  
   தமக்கு தானே வரம்பு மீறி நடந்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன்.
                                                                   (அல்குர்ஆன் 36:53)
    
    அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிச்சயமாக வழிகெட்டவர்கள் தாம் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழப்பார்கள்                (அல்குர்ஆன் 15:56)
    
     நாம் யாரை அழைக்கின்றோமோ அவர்கள் நம்மைப்போன்றவர்களே! அவர்களால் நமக்கு எந்த உதவியும் செய்ய இயலாது. 
    
    ‘‘நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கட்டும்.         (அல்குர்ஆன் 7:194)
     
    அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெறமாட்டார்கள்.
                                                                    (அல்குர்ஆன் 7:197)
     
   பிரார்த்தனை கையேந்திக் கேட்கும் போது வெறுமனே திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான். 
      
     ‘‘ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

  அறிவிப்பவர்: ஸல்மான் பாரிஸி (ரலி)       நூற்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதீ
     
   பாவமான காரியத்திற்காக துஆ கேட்கக்கூடாது. வட்டி வியாபாரம் ஒருவன் நட்த்தினால் ஹராம். இதில் எனக்கு அதிக பரக்கத்தைத் தா என துஆ செய்தல் கூடாது. அது போல் நமது உறவினரில் எவராவது நல்ல வசதி படைத்தவராக இருக்கும் போது அவர் மேல் பொறாமையடைந்து அவர் வியாபாரத்தில் நொடித்தலைத்தா! என்று பிரார்த்தனை செய்யக்கூடாது. 
   
       ‘‘எதையாவது அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் அதை கொடுக்காமலிருப்பதில்லை. ஆனால் அவன் பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும் அவன் பிரஆர்த்திக்காதவரை அவனின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதிலளிக்கிறான். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)       நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ
   
       நாம் கேட்கும் துஆக்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்படும் என்றாலும் சில நேரங்களில் கேட்கும் துஆ பலனளிப்பவையாக அமையும். அது எந்தெந்த நேரங்கள் என பார்ப்போம்.


இதன் தொடர்ச்சி  இன்ஷா அல்லாஹ் விரைவில் ......

நல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...02 படிக்க...
Previous
Next Post »