அரசு மருத்துவமனை சேவையும் தரங்கெட்ட பேச்சுக்களும்....

                                                 ஏக இறைவனின் திருப்பெயரால்...


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...அந்த தூயவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம் அனைவரின் மீதும் நின்றுநிலவட்டுமாக....


திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடக்கும் நோயாளிகளுக்கு இழைக்கப்படும் அநிதீகள்.



மருத்துவ சேவையில் தன்னை இணைத்தவர்களை யாரும் தாக்கி விடக்கூடாது என்பற்காக தமிழ்நாடு அரசு ஒரு ஆணை பிறப்பித்தது.


 எந்த ஒரு தனி நபரோ அல்லது கூட்டகாவோ அல்லது அமைப்பு மூலமாகவோ மருத்துவரின் மீதோ அல்லது மருத்துவமனையின் மீதோ வன்முறையில் ஈடுபட்டால் அல்லது மருத்துவ உழியர்களை தாக்கினால் ஜாமீனில்  வெளியே வர முடியாத அடிப்பையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும் அதிகபட்சம் 10 ஆண்டுகளும் சிறை  தண்டனை வழங்கப்படும் என்று 
இது வரவேற்க தக்க ஆணை  தான்


 ஆனால் இதனை மருத்துவமனையில் எழுதி மாட்டி வைத்து விட்டு 
எங்களை உங்களால் தொடக்கூட முடியாது.என்று தெனாவட்டாக மக்கள் நலனில் அக்கறையை இல்லாமல் மக்களை அலட்சியமாக நடத்தக்கூடிய நிலை திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நிலவுகிறது.
மருத்துவ பணி என்பது வெறும் பணம் சம்பாதிக்கும் மற்ற தொழில் போல இதுவும் ஒரு தொழில் கிடையாது.
அதனால்  தான் இதை ஒரு சேவை என்று அனைவரும் குறிப்பிடக்கூடியத்தை பார்க்கலாம்.
இப்படி ஒரு சேவையில் தன்னை இணைத்துக்கொண்ட மருத்துவ உழியர்கள் இந்த பணியை ஒரு சேவையாக செய்யாமல் பணத்திற்காக தரங்கெட்டு போய் சீப்பாக நடக்க கூடியதை கண் கூடாக பார்க்கலாம் (அனைவரையும் குறிப்பிடவில்லை இந்த பணியை சேவையாக செய்யக்கூடியர்களும் இருக்கிறார்கள்.)

மக்களின் கரங்களை கட்டிப்போட்டு விட்டு அவர்களை அதிகமாக கஷ்டப்படுத்தும் மருத்துவ உழியர்களுக்கு அரசு என்ன சட்டம்  போடும்.

ஆண் குழந்தை பிறந்தால் ஆயிரம் ரூபாயும்  பெண் குழந்தை பிறந்தால் ஐநூறு ரூபாயும் லஞ்சமாக பணிப்பெண்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

மேலும் அங்கே சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை தரக்குறைவாக திட்டுவது,தரக்குறைவாகநடந்து கொள்வது.


ஒரு பெண் பிரசவத்திற்கு செல்லும் போது அழுகிறார்.அவரது கணவர் கேட்கிறார் ஏன் அழுகிறாய் பிரசவ வலியை நினைத்தா? அதற்க்கு அந்த பெண் சொல்கிறார் "அதற்காக இல்லை அந்த வழியை தாங்கி கொள்வேன் ஆனால்  உள்ளே சென்றால் அவர்கள் திட்டுவதை என்னால் தாங்கி கொள்ள முடியாது.என்று கண்ணீருடன்.


இந்த  கட்டுரையை மிகை படுத்துவதற்காக சொல்ல வில்லை அனைத்தும் உண்மை கண்கூடாக பார்த்து எழுதப்படுகிறது. 


நான்கு நாள்களுக்கு முன்பாக அங்கே அனுமதிக்க பட்ட ஒரு வாய் பேச முடியாத ஒரு பெண்மணி பிரசவ நேரம் நெருங்கிவிட்ட காரணத்திற்காக        
அரசு மருத்துவனைக்கு வந்தார்.அவருக்கு சுகர் உள்ள காரணத்தால் பெட்டில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 29  நாட்களாக அங்கே உள்ளார் இந்த நிலையில் தினந்தோறும் அவரை திட்டுவது இவ எப்போ தான் போவாளோ? இங்கே வந்து படுத்துக்கிட்டு எங்கே உயிரை வாங்குற? என்று பணிப்பெண்களும் 
இது இன்னும் போகலையா?இங்கேயே கிடக்கிற?என்று டாக்டரும் சொன்னதை அந்த பெண்மணியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் அழுததை அங்கே பரிசோதனைக்கு  சென்ற நான் பார்த்தேன்.

அதன் விளைவு தான் இந்த கட்டுரை.

வாய் இல்லாத பெண் என்று பார்க்காமல் ஆடு மாடு விரட்டுவதை போல் விரட்டக்கூடியவர்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? 
உங்களை நாடி வரக்கூடியவர்கள். 

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும் பெரும் பணக்காரர்கள் கிடையாது.தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியில்லாமல் எங்களுக்கு அரசாங்கம் இருக்கிறது எங்களுக்கு சிகிச்சை அளிக்கும் என்ற நம்பிக்கையில் வரும் பாமர மக்கள் தான்.

சிகிச்சையில் குறைபாடு என்றால் பொறுத்து கொள்ளலாம் ஆனால் தவறான பேசுக்கள் சொல்வதற்கே  வாய் கூசும்  வசை சொற்கள்

இஸ்லாமிய மார்க்கம் மருத்துவ சேவை குறித்து சொல்ல கூடியது.

 'கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், 'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' (அல் குர் ஆன்-5:32)

அதன் அடிப்படையில் இஸ்லாமிய அமைப்புக்கள் போட்டி போட்டுக்கொண்டு இலவச மருத்துவ முகாம்கள் இரத்த தான முகாம்கள் நடத்திக்கொண்டு உள்ளன.

உதரனத்திற்க்கு....

TNTJ என்ற இஸ்லாமிய அமைப்பு பல ஆண்டுகளாக இரத்த தான சேவையில் தமிழகத்திலேயே முதலிடம் வகிக்கிறது.

இஸ்லாமிய அமைப்புகள் இரத்த தான சேவை GOOGLE searce 

இப்படி பட்ட சமுதாய மக்கள் சிகிச்சைக்காக சென்றால் ....

ஒரு இஸ்லாமிய பெண்மணி அவர் பிரசவ பரிசோதனைக்காக சென்று இருந்த போது புர்கா அணிந்து இருந்தார்.அதை கழட்ட சொன்ன உடன் கழட்டி விட்டு தலையில் ஷால் (முக்காடு )அணிந்த நிலையில் உள்ளே போனார்  அதற்க்கு அவர்கள் சொல்ல கூடிய வார்த்தை "இங்கே வந்தால் எல்லாத்தையும் காட்டனும் என்று ஆகிவிட்டது அப்புறம் எதற்கு முக்காடு ".

இன்னும் எத்தனையோ சம்பவங்கள் சொல்லலாம்....


எழுத கூச கூடிய சொற்களை சர்வ சாதாரணமாக சேவை பணியில் உள்ளவர்கள் பேசுவதை பார்த்தல் ....????


மக்கள்   உணர்சிக்கு அடிமையாவதற்கு முன்பு !!!! 


அரசாங்கம் இதற்க்கு எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் 

அன்பிற்கினிய மருத்துவ உழியர்களே சற்று`சிந்தித்து பாருங்கள்...
உங்களை நாடி வர கூடிய பாமர மக்கள் உயர் தர சிகிச்சைக்கு செல்ல வழி இல்லாதவர்கள். உங்களை நம்பி வரக்கூடியவர்களை நம்பிக்கை மோசடி செய்யாதீர்கள்.


திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடக்கும் நோயாளிகளுக்கு இழைக்கப்படும் அநிதீகள்   கண்கூடாக பார்த்த நான்  அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக எழுதும் கட்டுரை.

எனது அருமை தோழர்களே... இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்கள்.
Previous
Next Post »