இறைவனின் திருப்பெயரால்...
பேரழிவுகள் தரும் தெளிவுகள் என்ற தலைப்பில் சமிபகாலமாக எற்பட கூடிய அழிவுகள் எதற்காக ஏற்படுகிறது அதிலிருந்து நம்மை காக்க என்ன வழி என்பது போன்றவற்றை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இந்த கட்டுரையில் எழுத தீர்மானித்து இந்த கட்டுரையின் முதல் பகுதியும் எழுதப்பட்டது.அதன் இரண்டாவது பகுதி இந்த கட்டுரை.
முதல் பகுதி படிக்க கீழே கிளிக் செய்யவும்.
பேரழிவுகள் தரும் தெளிவுகள்-பாகம் 01
சென்ற பாகத்தில் அழிவுகள் இரண்டு காரணங்களுக்காக ஏற்படுகிறது என்றும் அந்த காரணங்கள் குறித்து திருமறையின் கூற்றையும் பார்த்தோம்.
அடுத்ததாக
2.எப்போது அழிவுகள் எற்படும்...
இறைவன் அழிவுகளை ஏற்படுத்துவதற்க்கு ஒரு காலக்கெடு விதித்துள்ளான்.அந்த தவணை காலம் வருவதற்க்கு முன்பாக திருந்தி வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால் தப்பித்துவிடலாம்.
திருமறை குர்ஆன் பேசுகிறது.
وَتِلْكَ الْقُرَى أَهْلَكْنَاهُمْ لَمَّا ظَلَمُوا وَجَعَلْنَا لِمَهْلِكِهِم مَّوْعِدًا -59,
பல ஊர்களை சேர்ந்தவர்கள் அநீதி இழைத்த போது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்க்கு ஒரு காலகெடுவையும் எற்படுத்தினோம்.(அல்குர்ஆன்-18:59)
திருமறை குர்ஆன் பேசுகிறது.
"என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள் என்று நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப்படாது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?'' என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்-71:2,3,4)
அதேபோல்...அழிவு இரவு நேரத்திலோ முற்பகலில் தூங்கும் போதோ வந்து சேரும்....
திருமறை குர்ஆன் பேசுகிறது.
وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَآئِلُونَ -4,
எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறோம்.அவ்வூர்களூக்கு நமது வேதனை இரவு நேரத்திலோ முற்பகலில் தூங்கும் போதோ வந்து சேர்ந்தது.(அல்குர்ஆன்7:4)
அழிவு எற்படுவதற்க்கு முன்பாக அந்த பகுதியை அனாச்சாரங்களில் மூழ்கியவற்களாகவும்,ஆடம்பரத்தில் திளைத்தவர்களாகவும் வாழ செய்து அழிப்பான்.
அழிவு நிகழ்ந்த பிறகு சரியான கண்ணோடு பார்த்தால்...இவர்களுக்கு நேர்ந்தது தவறில்லை என்று சொல்ல வேண்டும்.மாறாக இறைவனை விமர்சிக்க முடியாது.
திருமறை குர்ஆன் பேசுகிறது.
وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُواْ فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا -16,
ஒர் ஊரை நாம் அழிக்க நாடும் போது அவ்வூரில் சுகபோகத்தில் மூழ்கியோருக்கு (கட்டுப்பட்டு நடக்குமாறு)கட்டளையிடுவோம். அவர்கள் அதில் குற்றம் புரிவார்கள்.எனவே அவ்வூருக்கு எதிராக (நமது) வார்த்தை உறுதியாகி விடுகிறது.உடனே அதை அடியோடு அழிப்போம்.(அல்குர்ஆன்-17:16)
3.திருமறையில் கூறப்பட்ட ஒரு சில அழிவுகள் குறித்தும் அது நிகழ்ந்த காரணங்கள் குறித்தும் பார்க்கலாம்.
1.மத்யன்வாசிகள்
மத்யன்வாசிகளிடம் இறைதூதர் ஷுஐப்(அலை) அவர்கள் சொன்னார்கள்
என் சமுதாயமே! அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்! இறுதி நாளை நம்புங்கள்! பூமியில் குழ்ப்பம் விளைவித்து திரீயாதீர்கள்! என்று சொன்னார்கள்.ஆனால் அதை பொருட்படுத்தாமல் அந்த மக்கள் தமது நிலையை தொடர்ந்தர்கள்.நிலை பூகம்பம் என்கின்ற அழிவால் அழிந்தார்கள்
பார்க்க அல்குர்ஆன்(29:36,37)
2.ஆது,சமுதுவாசிகள்,
நல்வழி என்று தெரிந்தும் வராமல் சைத்தானை பின்பற்றியவர்கள்.
பார்க்க அல்குர்ஆன்(29:38)
நல்வழி என்று தெரிந்தும் வராமல் சைத்தானை பின்பற்றியவர்கள்.
பார்க்க அல்குர்ஆன்(29:38)
3.காருன்,ஃபிர்அவ்ன்,ஹாமான் போன்றோர்
பெரும் செல்வம் கொடுக்க பட்ட ஆட்சியதிகாரம் கொடுக்க பட்ட இவர்கள் இதனால் பூமியில் அகந்தை கொண்டார்கள். இதனால் அழிந்தார்கள்.
பார்க்க அல்குர்ஆன்(29:39)
4.லூத்(அலை)நபியின் சமுதாயம்
ஒரினசேர்க்கையில் ஈடுபட்ட காரணத்தினால் அழிக்கப்பட்டனர்.
பார்க்க அல்குர்ஆன்(53:53)
5.இன்னும் எத்தனையோ பேர்கள்.
திருமறை குர்ஆன் பேசுகிறது.
ஒவ்வொருவரையும் அவரவரின் பாவத்துக்காகத் தண்டித்தோம். அவர்களில் சிலர் மீது கல் மழையை அனுப்பினோம். அவர்களில் வேறு சிலரைப் பெரும் சப்தம் தாக்கியது. அவர்களில் சிலரைப் பூமிக்குள் உயிருடன் புதையச் செய்தோம். அவர்களில் சிலரை மூழ்கடித்தோம். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.(29:40)
4.என்ன? என்ன? காரணங்களுக்காக அழிவுகள் ஏற்படும்.
ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்
புகாரி 2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று (பதில்) கூறினார்கள்.
அழிவை தரும் ஏழு பெரும் பாவங்கள்
1.அல்லாஹ்விற்க்கு இணை கற்பித்தல்
2.சூனியம் செய்வது
3.நியாயமின்றி கொலை செய்வது
4.வட்டி உண்பது
5.அனாதை செல்வதை உண்பது
6.போரில் புறமுதுகிட்டு ஒடுவது
7.கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது
5.அழிவுகளில் இருந்து நம்மை காக்க...
மேலே கூறப்பட்ட பாவங்கள் நம்மை நெருங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இது போக இன்னும் சில காரண்ங்களுக்காக அல்லாஹ் அழித்துள்ளான்.
எடை மோசடி,ஒரின சேர்க்கை, etc.....
ஆக, எது தவறோ அதை செய்யாமல் இருந்தால் பாதுகாப்பு பெறலாம்.
மாறாக தவறான வழியில் கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஒரு நாள் நம் வாழ்வில் அழிவை சந்தித்தால்....அனைத்தையும் இழந்து ஆரம்பித்த இடத்திலே வந்து நிற்ப்போம்.அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!!!!
6.இந்த அழிவுகள் குறித்து நான் சொல்ல காரணம்...
திருமறை குர்ஆன் பேசுகிறது.
இந்த முன்னுதாரணங்களை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை விளங்க மாட்டார்கள்.(29:43)
திருமறை குர்ஆன் பேசுகிறது.
وَإِذَ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُواْ مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ -164,
அல்லாஹ் அழிக்க போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்ட்த்திற்க்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?”என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர்.அதற்க்கவர்கள் ”உங்கள் இறைவனிடமிருந்து (விசாரனையின் போது) தப்பிப்பதற்க்காகவும் அவர்கள் இறைவனை அஞ்சுவோராக ஆவதற்காகவும்(அவர்களூக்கு அறிவுரை கூறுகிறோம்)”எனக் கூறினர்.(அல்குர்ஆன்-7:164)
புகாரி2686. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சட்டங்களில்விட்டுக் கொடுப்பவரும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். எனவே, கீழ்த் தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த் தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, 'உனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். அவன், 'நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. (அதனால், கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தித் கொள்வேன்)" என்று கூறினான். (துளையிடவிடாமல்) அவனுடைய இரண்டு கைகளையும் அவர்கள் பிடித்தால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பறிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட)விட்டுவிட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள்.
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
உங்கள் மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கும் உங்கள் சகோதரன்
=S.ஷாஹிது ஒலி=unnmaygal.blogspot.com

1 comments:
Write commentsnanri..nanri..anbu appavukku.,.
ReplyEmoticonEmoticon