அன்பானவர்களின் கவணத்திற்க்கு கச கசா-ஒர் உண்மை செய்தி

                                     இறைவனின் திருப்பெயரால்...

கச கசா 

கச கசா என்ற பொருள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சமையலுக்காக
பயன்படுத்த படுகிறது
முஸ்லிம்களும் பெறுவாரியாக இதை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.


இந்த கச கசா வை ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ்(poppy seeds) என்று கூறுகின்றனர்.

இந்த பாப்பி விதை எனப்படும் .கச கசா என்பது பாப்பி செடியில் விதைகளை தாங்கி இருக்கும் பை முற்றி அது முழுவதுமாக காய்ந்த பிறகு அதன் உள்ளே இருந்து எடுக்க படுவதே கச கசா.

ஆனால் விதை பை பசுமை நிறத்தில் இருக்கும் போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் போது அந்த விதை பையை கீறி அதில் இருந்து வடிகிற பாலை சேகரித்தால் அது தான் ஒபியம் என்ற போதை பொருள் .

இந்த கச கசாவை ஒரளவுக்கு மேல் சாப்பிட்டால் போதை கொடுக்கும்
இதனால் தான் துபாய்,கத்தார்,குவைத்,ஓமான்,சவுதி அரேபியா,சிங்கப்பூர்,போன்ற நாடுகளில் இந்த கச கசா போதை பொருள் பட்டியளில் இடம் பெற்றுள்ளது.

கச கசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது.சென்னை உயர்நீதிமன்றம் மூலமாக தான்.2009 வது வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழககறிஞர்
நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அறியாமையால் பாதிக்கப்பட்ட 3 நபர்களை பற்றி அந்த வழக்கு அலசியது.
ஒருவர் பெங்களூரைச் சேர்ந்த முஹம்மது அப்துல் பகதூர் இவர் இந்தியவில்
பிரபலமான கிராஃபிக்ஸ் டிசைனர். அசைவ பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004 வருடம் பகதூர் சென்றார்.கூடவே மளிகை பொருட்களை
எடுத்து சென்றார்.

அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கச கசா பட எந்த கேள்வியும்,விசாரணையும் இல்லாமல் சரியத் கிரிமினல் கோர்ட்டில் பகதூரை நிறுத்தி விட்டனர்.

கச கசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்திற்க்காக 10 வருட சிறை தண்டனையும்,இந்திய ரூபாய் மதிப்பில் 60000 ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டன.

இதைப்போல் குஜராதைச் சேர்ந்த ஹனீஃபாயும்,ஸ்ரீராஜூவும் சவுதிஅரேபியா
சென்றார்கள் இவர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொண்டவர்கள்.இவர்கள்
இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கச கசா பாக்கெட் இருக்க உடணடியாக   10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்த போது இந்த விவரங்களை
அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும்,ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களில் இருந்து
காப்பற்ற வழி கேட்டார்.இதற்க்கு பதில் எதுவும் கிடைக்காததாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.

கச கசா விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகளான  பிரபாஸ்ரீதேவன் ,சத்தியநாராயணா,ஆகியோர் முன்னிலையில் வந்தது.இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும்,துறைமுகங்களிலும் கச கசா பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும்.அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்.என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்கள் என்று இனையதள செய்திகள் நமக்கு தெரியபடுத்துகிறது.

போதைப்பொருள் எல்லா வகைகளையும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'பித்உ' (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்:-ஆயிஷா(ரலி)
நூல்                 :-புஹாரி 5585

நபி(ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் 'அவை யாவை?' என்று கேட்டார்கள். நான் 'அல்பித்உ, அல் மிஸ்ர்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸயீத் இப்னு அபீ புர்தா(ரஹ்) கூறினார்:
நான் இதை எனக்கு அறிவித்த (என் தந்தை) அபூ புர்தா(ரஹ்) அவர்களிடம், 'பித் உ' என்றால் என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பித் உ' என்பது தேனில் தயாரிக்கப்படும் பானம், 'மிஸ்ர்' என்பது வாற்கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்" என்று பதிலளித்தார்கள்.
 அறிவிப்பவர்:-அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
நூல்                 :-புஹாரி 4343

கச கசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானே போதை வருகிறது.நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை கவனிக்கட்டும்.

அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில் குறைவானதும் ஹராம் ஆகும்.என்று நபி(ஸல்) கூறினார்கள்

அறிவிப்பவர்:-ஜாபிர்(ரலி)
நூல்                 :-திர்மீதி 1788

எனவே கசகசா என்ற பொருள் சேர்க்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதே சரியான வழியாகும்.

Previous
Next Post »