உங்க ஆண்ட்ராய்ட் போனில் ”இருக்கு! ஆனா இல்லையா?”-கவலையே வேண்டாம்


ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 02

                                      

                                               இறைவனின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே....

ஆன்ட்ராய்ட் சாப்ட்வேர் குறித்த பதிவு எழுதுவது என்று சொல்லி முதலாவதாக ஒரு
பதிவை எழுதினேன்..அதில் கிடைத்த ஆதரவை தொடர்ந்து அடுத்த பதிவை எழுதுகிறேன்


முதல் பதிவை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 01

அடுத்து  ஒரு ஆன்ட்ராய்ட் சாப்ட்வேரை உங்களுக்கு நான் RECOMMEND 

செய்வதாக இருந்தால் அது ES FILE EXPLORER என்ற இந்த ஆன்ட்ராய்ட் சாப்ட்வேரை தான் பரிந்துரைப்பேன்.
   எதற்காக,இன்றைக்கு ஆன்ட்ராய்ட் மொபைல் எப்படியாவது வாங்கி யூஸ் பண்ணி பார்த்து விட வேண்டும் என்று உயர்ந்த லட்சியத்துடன்!!!! நம்மில் பலர் இருக்கிறோம்.அதிலும் சிலர் வாங்கி உபயோக படுத்திக்கொண்டு உள்ளோம்..

அப்படி நாம் வாங்கிய ,ஆன்ட்ராய்ட் மொபைல் அதிக பணம் கொடுத்து வாங்கி இருக்கலாம் அல்லது
 மிகவும் குறைந்த விலைக்கே கிடைக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் களை வாங்கி  
இருக்கலாம். (அது நமக்கு இன்றைக்கு விசயமே கிடையாது)

அப்படி நாம் வாங்கிய ,ஆன்ட்ராய்ட் மொபைலில் defaut ஆக ஒரு சில applications இருக்கும்.அதில் குறிப்பிட தகுந்த application file manager நாம் போன் மெமரியிலும் மெமரி கார்ட்டிலும் பல்வேறு வகையான ஃபைல்களை வைத்திருப்போம்.(உதாரனம்:போட்டோக்கள்,ஆடியோக்கள்,வீடியோக்கள்) அதையெல்லாம் பார்க்க,பயன்படுத்த தேவையானது இந்த file manager  அப்ளிகேசன்.

800 ரூபாய் கொடுத்து வாங்கும் சைனா மொபைலில் கூட இது இருக்குமே இப்ப என்ன சொல்ல வர்றே...என்று கேட்கிறீங்களா?

விசயம் இருக்கே....அதற்கு முன்னாடி இதை download செய்து கொள்ளலாம்

படத்தை கிளிக் செய்து google play store சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

                                                

படத்தை கிளிக் செய்து 1 mobile store சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

                                                  

இப்போ விசயத்துக்கு வர்றேன்...

உங்க ஆண்ட்ராய்ட் போனில் ”இருக்கு! ஆனா இல்லையா?”-கவலையே வேண்டாம்

நாம் வாங்கும் பெரும்பாலான ஆண்ட்ராய்ட் போனில் file manager  அப்ளிகேசன் இருக்கும் ஆனால் அது நம்மில் பெரும்பாலனவற்களுக்கு பிடிக்காது.

அல்லது நண்பர் ஒருவர் ஒரு வாரத்திற்க்கு முன் htc போனை கொண்டு வந்து இதில் pdf  file ஒன்றை download செய்தேன் அதை காணவில்லை கண்டுபிடித்து தா என்றார் .(polise ல் கம்ப்ளைண்ட் கொடுக்க சொல்ல கூடாது...சரியா?) நானும் வாங்கி file manager ரை தேடினால் இல்லை .இப்படியும் சில போன்கள் இருக்கும்.(பிறகு file manager download செய்தோம் அது வேற கதை)

இப்படி file manager இருந்தும் ...இல்லாமல் இருக்கும் நமக்கு மிக மிக மிக (எத்தனை மிக வெண்டும் என்றாலும் போட்டு கொள்ளுங்கள்) பயனுள்ள file manager அப்ளிகேசன் இந்த 
    ES FILE EXPLORER    

இதன் நன்மைகளை பட்டியல் போடலாம் பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

1.file manager

நம் போன் மெமரி மற்றும் மெமரி கார்ட் மெமரி யில் உள்ளவற்றை பார்க்க..,அனுப்ப,,படிக்க ,,,பயன்படுத்த,,,போன்ற வசதிகளை தருகிறது.அதே சமயத்தில்
ஒரு போட்டோவை பார்க்க வேண்டுமென்றால் நாம் open செய்து பார்ப்போம் ஆனால் இதில் கனினியில் பார்ப்பது போல் பார்க்கும் வசதி தரப்பட்டுள்ளது.
கீழே உள்ள படங்களை பாருங்கள்....

மேலும் இந்த file manager  baground டிற்க்கு நாம் விரும்பும் படத்தை வைத்து கொள்ளலாம்...2.badk up option

இதில் உள்ள சிறப்புகளில் முதன்மையானது நம் மொபைலில் பயன்படுத்தும் appilacation களை நம் மொபைலில் back up எடுத்து வைத்து கொள்ளலாம்.இதனால் நம் நேரம்,பணம் எல்லாம் மிச்சமாகும்.

எப்புடி.......

நாம் googly play application களை download செய்ய முடியாததால் install செய்து கொள்கிறோம் அப்படி  install செய்த application களை இழந்தால் மீண்டும் நாம் googly play store சென்று  install செய்ய வேண்டும் இதற்க்கு இண்டர்நெட் வசதி வேண்டும் 
எந்த எந்த application களை பயன்படுத்தினோம்.ஞாபகம் இருக்காது.

அதே சமயம் அத்தனை அப்ளிகேசன்களையும் நம் போனில் ஒரே போல்டரில் பேக்கப் எடுத்து வைத்து கொண்டால்....

அப்படிதான் என் நன்பர் micromax a44 android mobile வாங்கி வந்தார் முதல் தடவை அனைத்து தேவையான அப்ளிகேசன்களையும் இன்ஸ்டால் செய்து கொடுத்தேன்.
பிறகு போனில் பிராப்ளம் வந்த்து போனை ரிசார்ட் செய்ய சொன்னேன்.அனைத்து அப்ளிகேசன்களும் போச்சு....அவர் போனில் எந்த எந்த அப்ளிகேசன்கள் ஏற்றி விட்டேன் எனக்கும் ஞாபகம் அவருக்கும் ஞாபகம் இல்லை.
பிறகு அவருக்கு ஏற்றி முதல் அப்ளிகேசன் இந்த ES FILE MANAGER.
இப்பெல்லாம் அவர் என்னிடம் அப்ளிகேசன் இன்ஸ்டால் செய்து தர சொல்லி கேட்பதில்லை.
காரணம் கிருமிகள் ஸாரி,அவரே பேக்கப் எடுத்து வைத்து இன்ஸ்டால் செய்து கொள்கிறார்.3.searce option

தேவையான ஒன்று எந்த போல்டரில் இருக்கு தெரியவில்லையா...கவலையே வேண்டாம்...பெயரை குறிப்பிட்டு தேடி கொள்ளலாம்....4.all farmat working option
  எல்லாவிதமான பார்மட்டுகளும் பயன்படுத்தும் விதம் உள்ளது.மிகவும் அருமை தனி தனியாக அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்து போனில் உள்ள மெமரியை காலி பண்ணாமல் இருக்க இந்த அப்ளிகேசன் நமக்கு உதவுகிறது
                     ES File Explorer  File Manager

இன்னும் சொல்லலாம் பதிவு நீளமாகி நீங்க என்னிடம் ”காய்” விட்டு விடுவீர்கள் அதனால் நான்”பழதோடையே” விடை பெறுகிறேன்.வேறு ஏதாவது டவுட் இருந்தால் கமெண்டில் கேளுங்கள் டவுட் இல்லாடா சும்மா போய்விடாதீர்கள் பாஸ் கமெண்ட் கொடுத்துவிட்டு போங்கள்////.....

இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்...

POSTED BY
 

Previous
Next Post »

9 comments

Write comments
pandian
AUTHOR
November 25, 2012 at 4:30 PM delete

payanulla pathivu....enudaia mobile Micromax a45 os ice 4ku updated. pana mudiyuma?,

Reply
avatar
saha shahid
AUTHOR
November 26, 2012 at 3:12 AM delete

detail kettu micromax kku mail anuppiullen.

Reply
avatar
pandian
AUTHOR
November 26, 2012 at 8:07 AM delete

sikiram kettu padil sollunga nanbarea

Reply
avatar
saha shahid
AUTHOR
November 30, 2012 at 10:37 AM delete

சகோ.....முதலில் என்னை மன்னித்து விடுங்கள்...தாமதப்படித்தியமைக்கு....

Reply
avatar
saha shahid
AUTHOR
November 30, 2012 at 10:49 AM delete

சகோ...உங்கள் போனை தற்போது அப்கிரேட் பண்ண முடியாது.
பார்க்க...
உங்கள் போனில்
settings=>about phone=>upgrade my phone

thanks my brother

Reply
avatar
pandian
AUTHOR
December 2, 2012 at 1:08 AM delete

nanrti.. intha takaval enkirunthu kidaithathu

Reply
avatar
devadass snr
AUTHOR
January 14, 2013 at 8:38 AM delete

அன்பு நண்பரே வணக்கம்.நான் முதன் முதலாக ரூ6800.00 மதிப்பில்
SAMSUNG GALAXY y DUOS LITE GT S5302 என்னும் மொபைல் வாங்கி உள்ளேன்.தங்களுடைய பதிவில் சொல்லியது போல விரும்பி வாங்கி அதை உபயோகிக்க சிரமப்படுகிறேன்.இதை நான் எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த எனக்கு ஏதும் ஆலோசனைகள் தர இயலுமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Reply
avatar
saha shahid
AUTHOR
February 7, 2013 at 11:49 AM delete

நிச்சயமாக முடியும் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை
பொறுத்திருங்கள்

Reply
avatar
saha shahid
AUTHOR
February 7, 2013 at 11:51 AM delete

நிச்சயமாக முடியும் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை
பொறுத்திருங்கள்

Reply
avatar