தப்லீக் சகோதரர்களே! உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் யார்?


                                                                                       நன்றி  -RASMINMISc.TK



இந்தக் கட்டுiர் இஸ்லாத்தைப் பற்றித் தெரியாமல் இஸ்லாம் என்ற பெயரில் பல தவருகளை செய்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் தப்லீக் ஜமாத் என்ற அமைப்பின் சகோதரர்கள் அவர்கள் யார் என்பதை அவர்களே அறிந்து கொள்வதற்காக எழுதப் படுகிறது.

இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இல்யாஸ் மவ்லானா என்பவரால் உருவாக்கப் பட்ட தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு,இன்று இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,பங்கலாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் ஆங்காங்கே பரவிக் கிடக்கிறார்கள்.

இந்த ஜமாத்தின் தலைமையகம் இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில் அமைந்திருக்கிறது.(டெல்லி மர்கஸ்) ஆரம்பத்தில் இஸ்லாத்தை மற்ற மக்களுக்கு எத்திவைக்க வேண்டும் என்ற கோஷத்தில் தப்லீக் என்று பெயர் சூட்டப் பட்ட இந்த இயக்கம்,அதன் அடிப்படை சரியான இஸ்லாமிய கொள்கையில் அமையப் படாததாலும்,பொது நலத்தில் சுயநலம் நுழைந்து விட்டதாலும் காலப் போக்கில் நேர் வழியில் இருந்து விலகி தவரான கொள்கையின் பக்கம் மிக அவசரமாக சென்று விட்டார்கள்.

இந்த அமைப்பினர் யார்? இவர்களின் கொள்கைகள் என்ன? இவர்களைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் சொன்ன முன்னரிவிப்புகள் என்ன? என்பவைகளைப் பற்றி இடம் பெற்றுள்ள ஸஹீஹான ஹதீஸ்களின் கருத்துக்களை ஒப்பு நோக்கிப் பார்போம்.

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் வெளிப்படும். இவனும்(துல் குவைஸரா என்ற முனாபிக்) அவர்களைப் போன்றவனே. அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழியினைக் கடக்காது. அவர்கள் வில்லிலிருந்து புறப்படும் அம்பினைப் போல் இஸ்லாத்தினை விட்டு வெளியேறி விடுவார்கள். தலையினை மொட்டையடித்திருத்திருப்பது அவர்களின் அடையாளமாகும். அவர்கள் வெளியாகிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களின் இறுதிக் கூட்டம் தஜ்ஜாலுடன் இருக்கும். யார் அவர்களுடன் போராடுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள்.

(அறிவிப்பவர் அபூ ஸஈத் அல்-குத்ரி (ரழி)
நூல் - நஸயீ,
அறிவிப்பவர் அனஸ் (ரழி). நூல் - அபூதாவூத்)

இந்த ஹதீஸை உலகில் இன்றிருக்கும் இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்தால் நபியவர்கள் இந்தச் செய்தியில் சொன்ன அனைத்து முன்னரிவிப்பும் அச்சி அஸலாக தப்லீக் ஜமாத்திற்கு பொருந்திப் போவதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

மேற்கண்ட ஹதீஸின் ஒவ்வொரு வாசகத்தையும் விரிவாக ஆராய்வோம்.

1.இறுதிக் காலத்தில் தோன்றுவார்கள்: உலக அழிவின் அடையாளங்களில் சிரிய அடையாளங்களில் அநேகமானவைகள் நடந்து முடிந்து,பெரிய அடையாளங்கள் மட்டுமே தோன்றுவதற்கு எஞ்சியுள்ள 20ம் நூற்றாண்டின் இருதிப் பகுதியில்தான் இவர்கள் உருவெடுத்தார்கள்.

2.குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்குள்ளே இறங்காது:
இந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் குர் ஆனை ஓதுவார்கள்.ஆனால் அந்தக் குர்ஆன் எதனைச் சொல்கிறதோ அதனை எடுத்துப் பின்பற்ற மாட்டார்கள்.குர்ஆன் பல கலைகளைப் படித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும் நமக்கெல்லாம் புரியாது.என்று குர்ஆனுக்கெதிராகவே பிரச்சாரம் செய்பவர்களும் இவர்கள்தான்.குர் ஆன் தர்ஜமாவை பள்ளியில் வாசிப்பவர்களை அடித்துத் தாக்குபவர்களும் இவர்கள்தான்.கற்பனை கூட செய்ய முடியாத பல கப்ஸாக்கள் எழுதப் பட்டிருக்கும் தஃலீம் தொகுப்பை குர்ஆனுக்கும் மேலாக மதித்து அதை எதிர்கக் கூடியவர்களை அடிப்பவர்களும் இவர்கள் தான்.

3.தலையை மொட்டையடித்திருப்பது இவர்களின் முக்கிய அடையாளமாகும்:
 தலையை மழிப்பதை சுன்னத் என்று கூறி மக்களுக்கு மத்தியில் மொட்டையடித்துக் கொண்டு அழைபவர்கள் இவர்கள் தான்.இவர்கள் நடத்தும் மத்ரஸாக்களின் சட்ட திட்டங்களை சீர்தூக்கிப் பாருங்கள்.அந்த சட்டதிட்டங்களில் முதன்மையானது அங்கு படிக்கும் மாணவர்கள் மொட்டையடிக்க வேண்டும் என்பதாகும்.

ஹஜ்,உம்ரா தவிர வேறு எந்நேரத்திலும் தலை முடியை நீக்குவதற்கு நபியவர்கள் எந்த முன்மாதிரியையும் நமக்குக் காட்டவில்லை.அதுவும் கட்டாயம் இல்லை.மழிக்கவும் முடியும்,முடியைக் குறைக்கவும் முடியும்.

ஆனால் இவர்களின் மத்ரஸாக்களில் படிக்கும் மாணவர்கள் மொட்டையடிப்பது கட்டாயக் கடமை.(மத்ரஸாவை நடத்துபவர்களும் படித்துக் கொடுக்கும் ஆசிரியர்களும் கூட பெரும்பாலும் மொட்டையடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.)

4.அவர்கள் வெளியாகிக் கொண்டேயிருப்பார்கள்: 
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் எப்போதும் வெளியாகிக் கொண்டேயிருக்கும் கூட்டமொன்றிருக்குமென்றால் அது இந்த தப்லீக் ஜமாத்தாகத் தான் இருக்கும்.வெளியாகுதல்,வெளிக்கிளம்புதல் என்று அனுதினமும் சொல்பவர்கள் இவர்கள் மாத்திரம் தான்.

குர் ஆனின் மகத்துவத்தை எடுத்துச் சொல்வதோ,நபியவர்களின் வார்தைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதோ,கல்வி கற்பதோ,கற்பிப்பதோ,கல்வித் துறைக்கு முக்கியத்துவம் வழங்குவதோ இவர்களின் வேலையில்லை.

ஷாபி,ஹனபி என்று மத்தஹபுகளுக்கும் ஜக்கரிய்யா சாஹிபின் தஃலீமுக்கும் வக்காலத்து வாங்கி அடிமைச் சேவகம் செய்வதே இவர்களின் வேலை.


5.வழிகெட்ட இந்தக் கூட்டம் மதீனாவிலிருந்து கிழக்குத் திசையில் தோன்றும்: ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையினை நோக்கியவர்களாக “அங்கிருந்து தான் குழப்பம் உருவாகும். அங்கிருந்து தான் குழப்பம் உருவாகும். அங்கிருந்து தான் குழப்பம் உருவாகும்! அங்கிருந்து தான் ஷைத்தானின் குழப்பம் உதயமாகும்!” என்று கூறினார்கள். (நூல் - முஸ்லிம்)

தப்லீக் ஜமாத்தின் தலைமையகம் இருக்கும் இடத்தை உலக வரை படத்தில் எடுத்துப் பாருங்கள்.டெல்லி மர்கஸ் மதீனா நகரில் இருந்து சரியாக கிழக்குத் திசையில்தான் அமைந்திருக்கும்.அது போல் தப்லீகின் முக்கிய தளங்களாக இயங்கும் பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள மர்கஸ்களும் மதீனாவில் இருந்து கிழக்குத் திசையில் தான் அமைந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா என்ன?

இந்தக் கூட்டம் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இப்படி வெகு தூரம் செல்வதற்கு காரணம்,அந்த ஜமாத்தின் அடிப்படையே தவறாக உள்ளதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள்; அறிவிக்கிறார்கள். நயவஞ்சகனாகிய துல்குவைஸராவின் கூட்டத்தினைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது அவர்களின் தொழுகையினையும், நோன்பினையும் நீங்கள் கண்டால், உங்களுடைய தொழுகையினையும், நோன்பினையும் நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள்.எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி.


இந்த தப்லீக் ஜமாத்தினர் எப்போதும் அமல்,இபாதத் என்ற பெயர்களை சொல்லிக் கொண்டிருப்பதால் அவர்களின் அமல்களைப் பார்பவர்கள் தாம் செய்கின்ற அமல்களில் குறை இருப்பதைப் போல் உணர்வதைப் பார்கிறோம்.அந்த அளவுக்கு அமல்கள் செய்வதில் முனைப்பாக இருப்பார்கள்.(ஆனால் துல் குவைஸராவையும்,அவனுடைய கூட்டத்தாரையும் போல் இவர்கள் தெளிவாக வழி கேட்டிலேயே இருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்க முடியாது.)

6.அவர்கள் வில்லிலிருந்து அம்பினைப் போல் இஸ்லாத்தினை விட்டு வெளியேறுவார்கள்:இவர்கள் எந்தளவிற்கு வேகமாக மார்கத்தை விட்டு வெளியேரியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் புத்தகங்களிலேயே உள்ள ஒரு சில தகவல்களைத் தருகிறோம்.

சொர்க்கத்தில் தொழுகையா?

 ஹஜ்ரத் முஜத்தித் அல்பதானி (ரஹ்) அவர்களைப் பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. அவர்களுடைய கலீபாக்களில் ஒருவரான மௌலானா அப்துல் வாஹித் லாஹீர் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் சொர்க்கத்தில் தொழுகை இருக்காதா? என்று கவலையுடன் கேட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் ஹஜ்ரத் சொர்க்கத்தில் தொழுகை எவ்வாறு இருக்க முடியும்? அது அமல்களுக்குப் பிரதி பலன்கள் வழங்கப்படும் இடமாயிற்றே! அமல் செய்யும் இடமல்லவே என்று கூறியவுடன்இ ஆஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். பிறகு சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்று கூறினார்கள்.

 இப்படிப்பட்ட நல்லடியார்களினால்தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது. உண்மையில் வாழ்க்கையின் இன்பத்தைச் சம்பாதித்துக் கொள்பவர்கள் இப்படிப்பட்ட பெரியார்கள் தான்.

 இது தப்லீக் தஃலீம் தொகுப்பு நூலில் பக்கம் 45 ல் இடம் பெற்றுள்ளது.

 என்னே பக்தி! என்னே தக்வா? என்று அப்பாவிகள் மூக்கில் விரலை வைத்து வியப்படையுமளவுக்கு இந்தக் கதை பெரியார்கள் (?) மீது போலிமதிப்பை ஏற்படுத்துவதுடன் இஸ்லாத்தை தவறான வடிவத்திலும் அறிமுகப்படுத்துகின்றது.

 தொழுகையாகட்டும்! இன்ன பிற வணக்க வழிபாடுகளாகட்டும்! ஒவ்வொரு முஸ்லிமும் அதை விரும்பியாக வேண்டும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆயினும் அதற்கு ஒரு வரையறை உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை விரும்ப வேண்டுமே தவிர இறைவன் விரும்பாவிட்டாலும் அவற்றை விரும்புவேன் என்று அடமபிடிக்க முடியாது.

 எப்போது அவற்றை நிறைவேற்ற வேண்டும் என இறைவன் நிர்ணயித்துள்ளானோ அப்போது அதைச் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டியுள்ளானோ அப்படிச் செய்ய வேண்டும்.

 தொழுகை நல்லது தானே என்று எண்ணிக் கொண்டு நான்கு ரக்அத்களுக்கு பதிலாக ஆறு ரக்அத்கள் ஒருவன் தொழுதால் அவன் பக்தனல்ல. அகம்பாவம் கொண்டவனாகவோ அல்லது மார்க்கத்தை அறியாத மூடனாகவோ அவன் இருக்க வேண்டும்.

 பக்தி எனும் பெயரில் ஒருவன் பகலில் நோன்பு நோற்பதற்குப் பதிலாக இரவிலும் நோன்பு நோற்க முயன்றால்இ தொழக் கூடாத நேரங்களில் ஒருவன் தொழுதால் அவன் தக்வாதாரியாக விட முடியாது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இதன் போலித்தனம் பளிச்சிடும்.

 சொர்க்கத்தில் தொழுகை கிடையாதா? என்று அஷ்ரப் அலி தானவியின் கலீபா அப்துல் வாஹித் என்பார் மேற்கொண்ட கதையில் கேட்கிறார். சொர்க்கத்தில் தொழுகை உட்பட எந்தவிதமான வணக்கமுறைகளும் கிடையாது என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. எல்லா முஸ்லிம்களும் அறிந்துள்ள இந்த சாதாரண விஷயம் கூட இந்தப் பெரியாருக்குத் தெரியவில்லை.

 அதுதான் போகட்டும்! எத்தனையோ பேரறிஞர்களுக்கு சில நேரங்களில் சாதாரண விஷயம் தெரியாமலிருப்பது இயற்கையே என்பதால் விட்டுவிடுவோம். ஒரு விபரமறிந்த மனிதர் இந்த பெரியாருக்கு சொர்க்கத்தில் தொழுகை கிடையாது என்பதை விளக்கிய பிறகும் கூட அவர் தனது அறியாமையை நீக்கிக் கொள்ள முன் வரவில்லை. தனது அறியாமையில் மேலும் பிடிவாதம் காட்டுகிறார். அவர் எதிரொலி தான் சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்ற அவரது கேள்வி.

 இந்தக் கேள்வியில் அவரது முரட்டு அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. இறைவனது ஏற்பாட்டில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து வெளிப்படுகின்றது.
 தொழுகை மற்றும் வணக்கங்கள் எதுவுமின்றி சொர்க்கத்தில் வாழ முடியும் என இறைவன் ஏற்பாடு செய்திருக்கும்போது அது எப்படிச் சாத்தியமாகும்? என்று இவர் ஐயம் தெரிவிக்கிறார் இறைவனது ஏற்பாட்டில் குறை காண்கிறார்.
 ஸகரிய்யா சாஹிப் பார்வையில் வேண்டுமானால் அந்தப் பெரியாரின் மகாத்மியம் தென்படலாம். நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இறைவனின் மகாத்மியத்திற்கு இவர் மாசு கற்பிக்கிறார் என்றே முடிவுக்கு வருவார்கள்.

 எந்த இறைவனது மேன்மையை அடியான் ஒப்புக்கொள்வதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோஇ இறைவன் எஜமான் என்பதையும்இ தான் அவனது அடிமை என்பதையும் பறைசாற்றுவதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ அந்தத் தொழுகையை வைத்தே இறைவனை ஸகரிய்யா சாஹிபும் இந்தப் பெரியாரும் தூர எறிகிறார்கள்.

 மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லாதவராகவும்இ இறைவனது ஏற்பாட்டில் குறை கண்டவராகவும் அறிமுகம் செய்யப்பட வேண்டிய இப்பெரியார் இங்கே மகானாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இதுபோன்ற கதைகளை தொழுகையைச் சிறப்பிப்பதற்காக கூறுவது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல. பெரியார்களைப் பற்றிய மதிப்பு மக்களிடம் இடம் பெற வேண்டும் என்பதுவே இவரது நோக்கம். இது ஆதாரமற்ற கற்பனை அல்ல. இந்த நோக்கத்தை ஸகரிய்யா சாஹிப் அவர்களே அவரையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்.
 இந்தக் கதையை எழுதிவிட்டுஇ பார்த்தீர்களா தொழுகையின் சிறப்பை? என்று ஸகரிய்யா சாஹிப் விமர்சனம் செய்திருந்தால் கதை சரியாக இல்லாவிட்டாலும் ஸகரிய்யா சாஹிபின் நோக்கத்தையாவது சந்தேகிக்காமலிருக்கலாம். இவரோ கதையை எழுதிவிட்டு இப்படிப்பட்ட நல்லடியார்களினால் தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது என்று கூறுகிறார். அதாவது அந்தப் பெரியாரின் மதிப்பைக் கூட்டிக்காட்டுவது தான் அவரது நோக்கம் என்பதற்கு இந்த விமர்சனமே சான்று.

 பெரியார்களை இப்படி உயர்த்தி அவர்களைப் பற்றி புனிதர்கள் என்ற நம்பிக்கையை வேரூன்றச் செய்தால் தன்னையும் மற்றவர்கள் புனிதாரக மதிப்பார்கள் என்ற திட்டமே இந்தக் கதைகளை அறிமுகப்படுத்துவதன் நோக்கம். ஸகரிய்யா சாஹிப் அறிமுகப்படுத்தும் வாஹிதும் இந்த ஸகரிய்யா சாஹிபும் முஜத்திதே அல்பதானி அவர்களின் சீடர்கள்இ தனது சகாவின் மகிமையை உயர்த்தினால் தனக்குப் பிற்காலத்தில் அதுபோன்ற உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே கதையின் பின்னணி. தங்களைப் பற்றி இமேஜை உயர்த்திக் கொண்டு முரீது வியாபாரத்தை தடங்கலின்றி நடத்திட இது போன்ற கதைகள் இவருக்குத் தேவைப்படுகிறது.
 பிறர் மெச்சுவதற்காக வணங்குதல்

 திருக்குர்ஆனிலும்இ நபிவழியிலும் அனுமதி உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கடுகளவும் அக்கறை கொள்ளாமல் தனி நபர்களை அளவுக்கதிகமாக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள மற்றொரு கதையைப் பாருங்கள்.

 முஹம்மது ஸிமாக் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள். கூபா நகரில் என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒருவர் குடியுருந்தார். அவருடைய மகன் ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்திருப்பார் இரவெல்லாம் தொழுகையிலும் இறைக்காதல் பாடல்கள் பாடுவதிலும் கழிப்பார். இதனால் அவர் இளைத்து எலும்பும்இ தோலுமாகக் காட்சியளித்தார். அவருடைய தந்தை என்னிடம் வந்து தன் மகனுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

 நான் ஒரு தடவை என் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்த போது அவருடைய மகன் அவ்வழியே சென்றார். நான் அவரை அழைத்தேன். அவர் என்னருகில் வந்து ஸலாம் சொல்லி உட்கார்ந்தார். நான் அவர் சம்மந்தமாக பேச ஆரம்பித்தவுடனேயேஇ எனது சிறிய தந்தை அவர்களே! நான் என்னுடைய உழைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டுமெனத் தாங்கள் ஆலோசனை சொல்லப் போகிறீர்கள் இல்லையா? சிறிய தந்தையாரே! இந்த மஹல்லாவை சேர்ந்த சில வாலிபர்களாகிய நாங்கள் இபாதத் செய்வதில் அதிகம் முயற்சிப்பவர்கள் யார் என்பதைப் பார்க்கலாம் என்று எங்களுக்கிடையே ஒரு போட்டியை ஏற்படுத்தினோம். என்னுடைய நண்பர்களாகிய அவர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சித்து வணக்கங்கள் புரிந்தனர். இறுதியில் அவர்கள் அல்லாஹுதஆலாவின் பால் அழைக்கப்பட்டுக் கொண்டார்கள். அவர்கள் செல்லும் போது மிக்க மகிழ்ச்சியுடனும்இ ஆனந்தத்துடனும் சென்றார்கள்.

 இப்பொழுது அவர்களில் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை என்னுடைய அமல்கள் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படும் பொழுது அதில் அவர்கள் குறை கண்டால் என்னைப்பற்றி அவர்கள் என்ன கூறுவார்கள்.

 இப்படிப் போகிறது கதை இது தப்லீகின் தஃலீம் தொகுப்பில் தொழுகையின் சிறப்பு எனும் பாடத்தில் பக்கம் 43இ44 ல் இடம் பெற்றுள்ளது.

 முகவரியில்லாத ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்து இரவெல்லாம் நின்று வணங்கியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் என்பதற்கு இதுவே அளவு கோலாகவும் அப்பாவி முஸ்லிம்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
 இஸ்லாம் இந்த நம்பிக்கையை மறுக்கின்றது. ஒரு முஸ்லிம் பகலெல்லாம் நோன்பு வைத்துக்கொண்டும் இரவெல்லாம் நின்று வணங்கிக் கொண்டும் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது.

 உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஊருக்கு ஆற்றவேண்டிய பணிகள்இ அண்டை அயலாருக்குச் செய்யும் கடமைகள் குடும்பத்திற்கு ஆற்றும் கடமைகள் என்று ஏராளமான கடமைகள் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இறைவணக்கத்தை நிறைவேற்றும் அதே நேரத்தில் இந்தக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும். இரண்டில் எதனையும் எதன் காரணமாகவும் விட்டுவிட முடியாது. இது தான் இஸ்லாத்தின் போதனை. வணக்கம் என்ற பெயரில் கூட அளவு கடந்து செல்வதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். இது பற்றிய சான்றுகளைக் காண்போம்.

 நபித் தோழர்களில் ஒருவர் திருமணமே செய்யமாட்டேன் என முடிவு செய்தார். மற்றொருவர் நான் தூங்காமல் தொழுது கொண்டே இருப்பேன் என்றார். வேறொருவர் விடாமல் நோன்பு வைப்பேன் என்றார்.இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்த போது இவ்வாறெல்லாம் கூறியவர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? நான் (சில போது) நோன்புவைக்கிறேன் (சில போது) விட்டு விடுகிறேன். தொழவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன். பெண்களைத் திருமணமும் செய்து உள்ளேன். யார் எனது (இந்த) வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர் என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து புகாரிஇ நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எத்தகையவர்கள் என்னைச் சேர்ந்தவரல்லர் என்று நபி (ஸல்) அடையாளம் காட்டினார்களோ அவர்கள் இங்கே மகான்களாக அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

 நான் காலமெல்லாம் நோன்பு வைப்பவனாகவும் இரவெல்லாம் குர்ஆன் ஓதுபவனாகவும் இருந்தேன். என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு கூறப்பட்டதோ அல்லது அவர்களாகவே அறிந்தார்களோ நான் அவர்களின் அழைப்புக்கேற்ப வந்தேன். 

நீ காலமெல்லாம் நோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் குர்ஆன் ஓதுவதாகவும் எனக்குக் கூறப்படுகிறதே எனக் கேட்டார்கள். நான் ஆம் இதன் மூலம் நல்லதையே நாடுகிறேன் என்றேன். அதற்கவர்கள் மாதம் தோறும் மூன்று நோன்புகள் நோற்பது உனக்குப் போதுமாகும் என்றார்கள். அதற்கு நான் “இதை விட சிறப்பாக (கூடுதலாக) செய்ய நான் சக்தி பெற்றவன்” என்றேன். அதற்கவர்கள் “உன் மனைவிக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. உன் விருந்தினருக்குச் செய்ய  வேண்டிய கடமைகளும் உள்ளன என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுள் ஆஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து புகாரிஇ நஸயியிலும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு அறிவிப்பில் இதைவிட சிறந்தது இல்லை எனவும் கூறப்படுகிறது.

 உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு வணக்கங்களில் வரம்பு மீறலாகாது என்பதற்கு இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் சான்றுகளாக உள்ளன. வணக்கத்தில் ஈடுபடுகிறேன் என்ற பெயரில் உடம்பை வருத்திக் கொள்வது இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த கருத்துக்கொண்ட கதைகளைத் தான் ஸகரிய்யா சாஹிப் தனது நூல் நெடுகிலும் கூறுகிறார்.

 ஸகரிய்யா சாஹிபாகட்டும்! இன்றைக்கு தப்லீகின் தலைமைப் பீடத்தில் இருப்பவர்களாகட்டும்! இந்தக் கதையின் போதனைகள் அவர்களே கூட கடைப்பிடிக்காத கடைப்பிடிக்க முடியாததாகும். இந்தக் கதை கூறும் போதனைப்படி எவரும் எலும்பும் தோலுமாகக் காட்சி தந்ததில்லை. அறுசுவை உணவுகளை விரும்பி உண்ணக் கூடியவர்களாகவே காண்கிறோம். நடைமுறைச் சாத்தியமற்ற இஸ்லாம் விரும்பாத போதனைகளை உள்ளடக்கியது தான் தஃலீம் தொகுப்பு நூல்.

 கதையின் நாயகரான முகவரியில்லாத அந்த வாலிபர் தன்னுடைய அமல்கள் தினமும் இரண்டுமுறை தன்னுடைய நண்பர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள் என்று ஆதங்கப்படுகிறார்.

 முன்னரே இறந்தி விட்ட இவரது நண்பர்களுக்கு இவரது அமல்கள் இரண்டு தடவை எடுத்துக் காட்டப்படும் என்பதற்கு என்ன ஆதாரம்? நல்லடியார்கள் கியாம நாள் வரையில் மண்ணறையில் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. அதற்கு மாற்றமாக மற்றவர்களின் அமல்கள் எடுத்துக் காட்டப்படும் என்று எப்படிக் கூறமுடியும்?

 ஷைகுமார்கள் என்ற போர்வையில் முரீதுகளை ஏமாற்றும் எண்ணம் படைத்தவர்கள் தான் இதுபோன்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முரீதுகளின் செயல்கள் தங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று பயமுறுத்தி மக்களை அடிமைப்படுத்தவே இது போன்ற கதைகள்.

 முரீது வழங்கிய ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகள் தேவைப்பட்டிருக்கலாம். முஸ்லிம்களுக்கு இது தேவையில்லாததாகும். இப்படிக் கூறிய வாலிபர் அவர் பார்வையில் மகானாக இருக்கலாம். அல்லாஹ்வின் தூதருடைய பார்வையில் அவர் ஒரு வழிகேடர்.

 அந்த வாலிபர் இப்படி நடந்து கொண்டது ஒரு புறம் தவறு என்றால்இ அவரது எண்ணம் அதைவிட மோசமானது. தன்னுடைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவே இப்படிக் கூடுதல் அமல் செய்வதாகக் கூறுகிறார். இந்த எண்ணமே அவரது அமல்கள் நல்லதாக இருந்தால் அதனை அழித்துவிடப் போதுமானதாகும். மூடர்களையும்இ வழிகேடர்களையும் மகான்களாக சித்தரித்து இஸ்லாத்திற்கு தவறான வடிவம் தரும் கதைகள் இவை.

 இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியார்.

 பெரியார்கள் மேல் அளவுக்கதிகமான மதிப்பையும்இ மலைப்பையும் ஏற்படுத்தும் மற்றொரு கதையைப் பாருங்கள்.

 முஹம்மதுப்னு ஸிமாஆ (ரஹ்) என்ற பெரியார் சிறந்த ஆலிமாக இருந்தார்கள். இவர் இமாம் அபூயூசுப் (ரஹ்)இ இமாம் முஹம்மது (ரஹ்) ஆகிய இரு இமாம்களின் மாணவராவார். அன்னார் தங்களுடைய நூற்றிமுப்பதாவது வயதில் காலமாகும் வரை ஒவ்வொரு நாளும் இரு நூறு ரக்அத்கள் நபில் தொழுது கொண்டிருந்தார்களாம்இ அவர்கள் கூறுகிறார்கள்: நாற்பது ஆண்டுகள்வரை தொடர்ந்து முதல் தக்பீர் தவறாமல் நான் தொழுது வந்திருக்கிறேன் ஒரே நேரத்தை தவிர...... இப்படிப் போகிறது கதை!

 இந்தக் கதை தப்லீகின் தஃலீம் தொகுப்புநூலில் தொழுகையின் சிறப்புகள் என்ற பகுதியில் 86ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 ஒரு நாளைக்கு 200 ரக்அத்கள் நபில் தொழுவது சாத்தியப்படக்கூடியது தானா? இதை முதலில் நாம் ஆராய்வோம்.

 ஒரு நாளைக்கு மொத்தம் 24 மணி நேரங்களே உள்ளன. இந்த இருபத்திநான்கு மணி நேரங்களில் ஏறத்தாழ மூன்று மணிநேரங்கள் தொழக்கூடாத நேரங்களாகும்.

 சூரியன் உதிக்கத் துவங்கி முழுமையாக உதிப்பதற்கு 20 நிமிடங்கள். சூரியன் உச்சிக்கு வரத் துவங்கி உச்சி சாய்வதற்கு 20 நிமிடங்கள். சூரியன் மறையத் துவங்கி முழுமையாக மறைவதற்கு 20 நிமிடங்கள். இந்த மூன்று நேரங்களிலும் தொழக்கூடாது என்று ஹதீஸ்களில் தடைவந்துள்ளது. இந்த வகையில் 24 மணிநேரங்களில் ஒரு மணிநேரம் குறைகின்றது.

 அஸர் தொழுத பிறகு உபரியான தொழுகை தொழுவதற்கும் ஹதீஸ்களில் தடை வந்துள்ளது. இந்தப் பெரியார் முதல் தக்பீரிலேயே தொழுதுவிடும் வழக்கமுடையவர் என்று இந்தக் கதையில் கூறப்படுகின்றது. அஸர் தொழுகையை நான்கு மணிக்கு அவர் நிறைவேற்றினால் மஃரிப் வரை குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தொழக் கூடாத நேரங்கள். இந்த வகையில் இரண்டு மணி நேரங்கள் கழிந்து விட்டால் எஞ்சியிருப்பது 21 மணி நேரங்களே.
 ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலம் கழிப்பது நான்கு தடவை சிறுநீர் கழிப்பது என்று வைத்துக் கொண்டாலும்இ குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும். இவ்வாறு ஆறு தடவை வுளூ செய்யவேண்டும். இந்த வகையில் குறைந்தது அரைமணி நேரமாகும்.இப்போது எஞ்சியிருப்பது 20 மணி நேரங்களே.

 மனிதன் என்ற முறையில் சில மணி நேரங்களாவது தூங்க வேண்டும். நபியவர்களும் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி வலியுறுத்துகிறார்கள். மனித உடலும் இயற்கையாகவே தூக்கத்தின் பால் நாட்டம் கொண்டதாகவே உள்ளது. குறைந்த பட்சம் ஐந்து மணி நேரங்கள் தூக்கத்தில் கழித்தால் எஞ்சியிருப்பது பதினைந்து மணிநேரங்களே.

 எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் பசி உயர்வு இல்லாத மலக்குகளாக அவர்கள் ஆக முடியாது. டீ காபி டிபன் என்று பல தடவை உண்ணாவிட்டாலும் குறைந்தது இரண்டு தடவைகளாவது உண்ணவேண்டும். இதற்கு குறைந்தபட்சமாக அரைமணி நேரமாவது தேவைப்படும். இப்போது எஞ்சியிருப்பது பதினான்கரை மணி நேரங்களே.

 இந்த பதினான்கரை மணி நேரங்களில் இந்தப் பெரியார் ஐவேளைக் கடமையான தொழுகைகளையும் தொழுதுவிட்டு சுன்னத்தான தொழுகைகளையும் தொழுதுவிட்டு உபரியாக 200 ரக்அத்கள் நபில் தொழுதுள்ளார்களாம்.

 ஜமாஅத்துடன் ஐவேளைத் தொழுகையையும் தொழ சுமார் ஒரு மணி நேரம். அதன் பின் ஓதவேண்டிய சுன்னத்தான திக்ருகள் துஆக்கள் ஆகியவற்றுக்கு அரை மணிநேரம்இ தொழுகையின் முன்பின் சுன்னத்துகளுக்காக ஒரு மணிநேரம்இ இரவுத் தொழுகைஇ லுஹாத் தொழுகை ஆகியவற்றுக்கு ஒரு மணிநேரம். இப்போது எஞ்சுயிருப்பது பதினொரு மணி  நேரங்களே.

 இந்தப் பதினொரு மணி  நேரங்களில் அதாவது 660 நிமிடங்களில் 200 ரக்அத் நபில் தொழ முடியுமா? பெரியார்கள் நம்மைப் போல் அவசர அவசரமாகத் தொழமாட்டார்கள். நிறுத்தி நிதானமாகத் தொழுவார்கள். இந்தப் பெரியார் இதில் விதிவிலக்கானவர். நம்மைப் போல் வேகமாகத் தொழுபவர் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு ரக்அத்துக்கு ஐந்து நிமிடங்களாவது ஆகும். 200 ரக்அத்துகளுக்கு 1000 நிமிடங்கள் தேவை.

 மிக முக்கியமான தேவைகளுக்குப் போக எஞ்சியிருக்கும் 660 நிமிடங்களில் 200 ரக்அத்கள் தொழுவது எப்படி சாத்தியமாகும்? அப்படித் தொழுதால் அது தொழுகையாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

 இது போக இன்னும் பல அலுவல்களைக் கணக்கில் நாம் சேர்க்கவில்லை. அவற்றுக்கு மழுப்பலான பதில்களை ரெடிமேடாக வைத்துள்ளனர்.

 மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நேரம் தேவை என்று நாம் சொன்னால் இந்தப் பெரியார் அந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அவர்கள் கூறலாம். அவர் வேண்டுமானால் அப்பாற்பட்டவராக இருக்கலாம்இ அவரது மனைவியும் அப்பாற்பட்டவராக இருந்திருப்பாரா? என்று நாம் கேட்டால் அவர் பிரம்மச்சாரியாக இருந்திருக்கலாம் என அவர்கள் கூறலாம்.
 தான் உண்பதற்காகவும் தனக்குச் சமைத்துப் போடுவோர்கள் உண்பதற்காகவும்இ உழைக்க நேரம் தேவை என்று நாம் சொன்னால் பூர்வீகச் சொத்துக்கள் ஏராளமாக இருந்துருக்கலாம் அல்லவா என்பர்.

 மார்க்க அறிஞராக அவர் இருப்பதால் மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்கும்இ நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் எல்லாருமே மார்க்க அறிஞர்களாக இருந்துருக்கலாம் என்பர்.

 திருமணம் ஜனாஸா போன்ற சுன்னத்தான காரியங்களுக்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் பித்அத்கள் மலிந்திருந்ததால் அவற்றை புறக்கணித்திருக்கலாம் என்பர். முன்னர் கூறியதற்கு இது முரணாக உள்ளதே என்று இவர்கள் சிந்திப்பதில்லை.

 நியாயப்படுத்தவே முடியாத பணிகளுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கியுள்ளோம். இவற்றையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தாலும் 200 ரக்அத்கள் தொழுவதற்கு நிச்சயமாக நேரம் கிடைக்காது.

 பெரியார்களைப் பற்றி மலைப்பை ஏற்படுத்தி அவர்களை வழிபடுவதற்காகவே இது போன்ற கதைகளை கட்டியுள்ளனர். ஸகரிய்யா சாஹிபும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால்தான் தன் நூல் நெடுகிலும் இது போன்ற நம்ப முடியாத அபத்தமான கதைகளை அள்ளி விடுகிறார்.

 மலஜலம் கழிக்காத பெரியார்

 தொழுகையின் சிறப்புக்களைக் கூறும் சாக்கில் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்தும் மற்றொரு கதையைக் கேளுங்கள்!

 சூபியாக்களில் பிரபலமான ஷைகு அப்துல் வாஹித் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் இரவு எனக்கு தூக்கம் மிகைத்து நான் வழமையாக ஓதக்கூடிய திக்ருகளையும் ஓதாமல் தூங்கி விட்டேன். அப்போது கனவில் மிக அழகிய மங்கை ஒருத்தியைக் கண்டேன். அவள் பச்சைப் பட்டாடை அணிந்திருந்தாள். அவளுடைய காலணிகள் கூட தஸ்பீஹ் செய்வதில் ஈடுபட்டிருந்தன.

 அவள் என்னை நோக்கி “நீர் என்னை அடைய முயற்சிப்பீராக! நான் உம்மை அடைய முயற்சிக்கிறேன்” என்று கூறி சில பேரின்பக் காதல் கீதங்கள் பாடினாள்.

 இக்கனவைக் கண்டு விழித்த நான் இனிமேல் இரவில் தூங்குவது இல்லை என்று சத்தியம் செய்து கொண்டேன். அவ்வாறே நாற்பது ஆண்டுகள்வரை இஷாவுக்குச் செய்த உளூவுடன் சுப்ஹுத் தொழுது வந்தேன் என்று கூறுகிறார்கள்.

 இந்தக் கதை தொழுகையின் சிறப்பு எனும் பகுதியில் 118ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதலை அலட்சியம் செய்துவிட்டு அதிகப் பிரசங்கித்தனமாக நடப்பவர் எப்படிப் பெரியாராக இருக்க முடியும்!

 இஷாவுக்குச் செய்ய உளூவைக் கொண்டு நாற்பது ஆண்டுகள் 14இ400 இரவுகள் எப்படி சுபஹ் தொழமுடியும்? இந்தப் பதினான்கு ஆயிரத்து நானூறு நாட்கள் அவர் உறங்கியதே இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இத்தனை இரவுகளும் அவர் மலஜலம் கழிக்கவில்லை: காற்றுப் பிரியவில்லை: மனைவியுடன் சம்போகம் செய்யவில்லை என்பது அதைவிட நம்ப முடியாததாக உள்ளது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அவர் அறியாத நிலையில் அவர் வரம்பு மீறியதையாவது நம்பலாம். தன்னைப் பற்றிப் பெருமையாக அவரே கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

 சாத்தியமற்ற இது போன்ற சாதனைகளையும் பெரியார்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர இந்தக் கதையில் ஒரு முஸ்லிமுக்கு எந்தப் படிப்பினையும் காணோம். இதே போன்ற மற்றொரு கதையைப் பாருங்கள்!

 அபூபக்கர் ளரீர் (ரஹ்) என்ற பெரியார் கூறுகிறார்கள்:- என்னிடம் வாலிபரான ஓர் அடிமை இருந்தார்? அவர் பகல் முழுவதும் நோன்பு வைத்திருப்பார். இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபட்டிருப்பார். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து நான் இன்றிரவு எதிர் பாராத விதமாக தூங்கிவிட்டேன். அப்போது கனவு ஒன்று கண்டேன். அதில் நான் தொழுமிடத்திலுள்ள மிஹ்ராப் சுவர் உடைந்து அதன் வழியாக சில பெண்கள் வந்தனர். அவர்கள் மிக அழகிய தோற்றமுடியவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருத்தி மட்டும் அருவருப்பான தோற்றமுடையவளாக இருந்தாள். நான் அப்பெண்களிடம் “நீங்களெல்லாம் யார்? இந்த அருவருப்பான பெண் யார்?” என்று கேட்டதற்கு “நாங்களெல்லாம் உம்முடைய சென்று போன இரவுகள். இப்பெண் உமது இன்றைய இன்றைய இரவு” என்று இப்பெண்கள் பதில் அளித்தார்கள்.

 இந்தக் கதை 119ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு முஸ்லிம் இரவில் தூங்கக் கூடாது என்றும் பகலெல்லாம் நோன்பு வைத்திருக்க வேண்டும் என்றும் இந்தக் கதை மூலம் ஸகரிய்யா சாஹிப் சொல்ல வருகிறாரா? 

தூங்கிய இரவுகள் பாழாய்ப்போன இரவுகள் என்கிறாரா?

 குடும்பத்துக்கும்இ ஊருக்கும்இ உலகுக்கும்இ தனக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு இரவில் உறங்க வேண்டிய அளவுக்கு உறங்கிவிட்டு பின்னிரவில் எழுந்து வணங்கிய நபித்தோழர்கள் எல்லாம் தங்கள் இரவுகளைப் பாழடித்துவிட்டதாக ஸகரிய்யா சாஹிப் கூற வருகிறாரா?

 இந்தப் பெரியார்களின் வழியில் ஸகரிய்யா சாஹிப் கூட நடந்ததில்லை. அவர் உறங்கியுள்ளார். பகல் காலங்களில் சுவைமிக்க உணவுகளை உண்டுகளித்துள்ளார். அவரும் கூட தனது இராப் பொழுதுகளை பாழடித்தவர்தானா?

 முஸ்லிம்களைப் பண்டார சன்னிதிகளாகவும்இ துறவிகளாகவும் ஆக்கி அவர்களை முடக்குவதற்காகவே இப்படிப்பட்ட கதைகளை பொறுக்கி எடுத்து எழுதியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

 இரவெல்லாம் தூங்காத பகலெல்லாம் நோன்பு வைத்த கதைகள் ஏராளமாக அந்த நூலில் மலிந்துள்ளன. ஸகரிய்யா சாஹிபுக்குத் தோன்றிய பெயர்களையெல்லாம் பயன்படுத்தி இவ்வாறு கதையளந்துள்ளனர். இதுவரை நாம் செய்த விமர்சனமே இந்த வகையான அனைத்து கதைகளுக்கும் பொருந்தும் என்பதால் வேறு வகையான கதைகளைப் பார்ப்போம்.
 கடமை மறந்த கூலிக்காரர்

 ஷைகு அபூ அப்தில்லாஹ் ஜலாவு (ரஹ்) என்பவர்கள் கூறுவதாவது: ஒரு நாள் என்னுடைய தாயார்இ என் தந்தையாரிடம் மீன் வாங்கி வரும்படியாகக் கூறினார். என் தந்தை கடைத்தெருவிற்குச் சென்றார்கள். நானும் அன்னாருடன் சென்றிருந்தேன். அங்கு மீனை வாங்கி அதனை வீட்டுக்குக் கொண்டுவர ஒரு கூலிக்காரரைத் தேடினார்கள். அப்பொழுது எங்களுக்கருகில் நின்றிருந்த ஒரு வாலிபர்இ “பெரியவரே இதனைத் தூக்கி வர கூலியாள் வேண்டுமா?” என்று கேட்டார். ஆம் என்று என் தந்தை பதில் கூறியதும் அவர் அதனை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு எங்களுடன் நடந்து வந்தார்.

 சென்று கொண்டிருக்கும் போது வழியில் பாங்கு சப்தம் கேட்டதும் அந்த வாலிபர்இ “நான் உளூச் செய்ய வேண்டியிருக்கிறது. உளூச் செய்து தொழுத பின்னர்தான் இதனை எடுத்து வர முடியும். உங்களுக்கு விருப்பமிருந்தால் சற்று நேரம் காத்திருங்கள். இல்லையானால் தங்களுடைய மீனை எடுத்துச் செல்லலாம் என்று கூறி மீனை வைத்து விட்டுச் சென்று விட்டார்.

 ஒரு கூலிக்காரப் பையன் இவ்வளவு பக்தியுடன் இருக்கும் பொழுதுஇ நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு இவரை விட மிக மிகத்தகுதியுள்ளவர்கள் என்பதற்காக என் தந்தையார் எண்ணியவராக அந்த மீன் கூடையை அங்கேயே வைத்துவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்று விட்டார்கள். நாங்கள் தொழுகையை முடித்து திரும்பி வந்த போது அந்த மீன் அங்கேயே அப்படியே இருந்தது. அந்த வாலிபர் அதனைத் தூக்கி எங்களுடைய வீட்டில் கொண்டு வந்து விட்டார்.

 வீட்டுகுச் சென்று தந்தை இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியை என் தாயாரிடம் கூறினார். அதற்கு என் தாயார்இ “அவரை இருக்கச் சொல்லுங்கள். அவரும் மீன் சாப்பிட்டுச் செல்லட்டும்” என்று கூறினார். இதனை அவ்வாலிபரிடம் கூறியதும்இ “நான் நோன்பு வைத்திருக்கிறேன்” என்றார் அவர். சரி மாலையிலாவது இங்கு வந்து நோன்பு திறக்க வேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்திக் கூறியதும்இ “நான் போய்விட்டுத்திரும்பி வர முடியாது. வேண்டுமானால் இங்கு அருகிலுள்ள மஸ்ஜிதில் தங்கி இருக்கிறேன். மாலையில் உங்களுடைய விருந்தைச் சாப்பிட்டுச் செல்கிறேன்.” என்று கூறிவிட்டு அருகிலுள்ள மஸ்ஜித்துக்கு சென்று விட்டார்.
 மாலை நேரமானதும் மஃரிபிற்குப் பின் அவர் வந்தார். சாப்பிட்டு முடித்த பின் அவர் இரவில் தங்குவதற்காக தனிமையான ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் அவர் தங்கினார். எங்களுக்குப் பக்கத்து வீட்டில் நடக்க முடியாத சப்பாணிப்பெண் ஒருத்தி இருந்தாள். அவள் மறுநாள் முற்றிலும் சுகம் உடையவளாக - நன்கு நடக்கக் கூடியவளாக இருப்பதைப் பார்த்தோம். நாங்கள் அவளிடம் ‘உனக்கு எப்படிச் சுகம் ஏற்பட்டது’ என்று கேட்டதற்கு உங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளியின் பொருட்டால் நான் அல்லாஹுதஆலாவிடம் துஆ கேட்டேன். “யா அல்லாஹ் இந்த விருந்தாளியின் பரக்கத்தால் எனக்கு சுகமளிப்பாயாக என்று கேட்டதும் உடனே எனக்குச் சுகம் எற்பட்டுவிட்டது.” என்று அப்பெண் கூறினாள். பிறகு நாங்கள் அவ்வாலிபர் தனிமையில் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது கதவு மூடியே இருந்தது. ஆனால் அவரை அங்கு காணவில்லை. எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

 இந்தக்கதை மேற்படி நூலில் 124ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. கூலியாள் வேண்டுமா என்று இவ்வாலிபர் வந்து கேட்கிறார். மீனைத்தூக்கி வருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர் இடையிலேயே ஒப்பந்தத்தை முறிக்கிறார். இப்படி நடக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கவில்லை. கூலிக்கு வேலை கேட்கும் போதே அவர் யோசித்திருக்க வேண்டும். அல்லது பாங்கு சப்தம் கேட்கும் வரை நான் தூக்கி வருவேன் என்று அவர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். ஆனால் அவர் இடையில் கழுத்தறுக்கிறார். இத்தகைய ஒப்பந்தத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

 பாங்கோசை கேட்டவுடன் ஒப்புக் கொண்ட வேலையைக் கூட உதறித் தள்ளிய இந்த வாலிபர் மஃரிபுக்குப் பின் சாப்பிட்டு விட்டு தனியறைக்குச் சென்று விட்டதாக இந்தக் கதை கூறுகிறது. இவ்வளவு பேணுதலுள்ளவர் இஷா ஜமாஅத்துக்காக ஏன் புறப்படவில்லை? இந்தக் கதை பொய்யாகப் புனையப்பட்டது என்பதை இந்த முரண்பாடு காட்டிக் கொடுத்து விடுகின்றது.
தொழுகையின் சிறப்பைச் சொல்லும் சாக்கில் ஸகரிய்யா சாஹிப் தூவுகின்ற விஷக்கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  
   
 எவரது பொருட்டாலும் இறைவனிடம் எதையும் கேட்கலாகாது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை. ஒவ்வொருவரும் தத்தமது நல்லறங்களின் பொருட்டாலேயே இறைவனிடம் உதவி தேட வேண்டும். ஸகரிய்யா சாஹிப் பின்பற்றுகின்ற இமாம் அபூஹனீபா அவர்கள் கூட இதை மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.

 இதற்கு மாற்றமாக அந்த வாலிபரின் பொருட்டால் அப்பெண்மணி குணமடைந்தாள் என்று கதை விடுகிறார். தனது இமாமுடைய போதனைக்கு மாற்றமாகவும் இவர் கதையளந்திருப்பது இது போன்ற மரியாதையை மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கே.

 நல்லடியார்களை ஷைகுமார்களை மக்கள் இவ்வளவு உயரத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்ற போதனை தான் இந்தக்கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.

7.இவர்களின் இறுதிக் கூட்டம் தஜ்ஜாலுடன் இருக்கும்: தஜ்ஜாலைப் பொருத்த வரை அவனிடம் அல்லாஹ் கொடுத்திருக்கும் மிக முக்கியமான விஷயம்.சில அற்புதங்களாகும்.இந்த அற்புதங்களை செய்து காட்டி தான் கடவுல் என்று அவன் சொல்வான் அதைப் பார்து அதிகமான மக்கள் வழி கெட்டுப் போவார்கள்.இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு தப்லீக் ஜமாத்தின் நிலையை நினைத்துக் பாருங்கள்.

அற்புதம்,அதிசயம்,கராமத்து,குத்ரத்து என்று எவன் எந்தப் பொய்யை செய்து காட்டினாலும் அதை அப்படியே நம்புவது மட்டுமன்றி அடுத்தவர்களையும் நம்பவைத்து தெளிவாக வழி கேட்டிட்குப் போய் கொண்டிருப்பவர்கள் இவர்கள் தான்.சாதாரணமாக சிலர் செய்யும் இந்த பொய்யான செயல்களையே கராமத்து,குத்ரத்து என்று சொல்லும் இவர்கள் தஜ்ஜால் மரணித்தவனையே உயிர்பித்துக் காட்டும் போது பார்துக் கொண்டிருப்பார்களா என்ன? கண்டிப்பாக தஜ்ஜாலுடன் கைகோர்கும் முதல் கூட்டமாக இவர்கள் இருப்பார்கள் என்பதே இந்த ஹதீஸில் இருந்து நாம் அறியக் கூடிய முக்கியமான விஷயமாகும்.

8.இவர்களுடன் யார் போராடுவார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள்: நபி(ஸல்)அவர்களின் இந்த முன்னரிவிப்பை உன்னிப்பாக சிந்தித்துப் பாருங்கள்.தப்லீக் ஜமாத் என்ற இந்த வழி கெட்ட அமைப்புடன் போராடுவது அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை பெற்றுத் தரும் செயல் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.இலங்கை,இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் என்று எந்த நாட்டில் நாம் பார்தாலும் இவர்களுடன் போராடுபவர்கள் தவ்ஹீத் ஜமாத்தினராகத் தான் இருப்பார்கள்.இவர்களிடம் அடி வாங்கியோர் பட்டியலிலும் அதிகமாக தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களே இடம் பிடித்துள்ளார்கள் என்பதே உண்மை.

ஆக அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!

தப்லீக் அன்பர்களே! அபிமானிகளே!

வழி கெட்ட தப்லீக் கொள்கையிலிருந்து வெளியேறி மறுமையில் வெற்றியைப் பெற்றுத் தரும் ஏகத்துவக் கொள்கையில் ஒன்றினையுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கும்,எங்களுக்கும் அருள் புரிவானாக
Previous
Next Post »