தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவன் நான். எதிர்காலத்தில் புவியியல் அல்லது பொருளாதாரம் படிக்க விரும்புகிறேன். எதைப் படிக்கலாம்?-2009/02/21
எதிர்காலத்தைப் பற்றி பிளஸ் 2 படிக்கும் போதே சிந்திப்பது ஆரோக்கியமான அம்சம். வாழ்த்துக்கள். பணிவாய்ப்புகளை வைத்து யோசித்தால் பொருளாதாரப் படிப்பே புவியியலை விட சிறந்ததாக திகழ்கிறது. புவியியலுக்குக் குறிப்பிட்ட பணி வாய்ப்புகளே உள்ளன. ஆனால் பொருளாதாரம் படித்து திறன் பெற்றவருக்கு பல்வேறு துறைகளில் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதைக் காண்கிறோம்.
பொருளாதாரத்தில் ஆர்வமுடையவராக இருந்தால் நீங்கள் பட்டப்படிப்பு முடித்து பின்பு அதில் பட்ட மேற்படிப்பும் படிப்பது அவசியம். பொருளாதாரம் படித்து முடிப்பவர்கள் சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி, ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., கம்பெனி செகரடரி, பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன், பைனான்சியல் இன்வெஸ்ட்மென்ட் அனலிசிஸ் போன்ற சிறப்புப் படிப்புகளைப் படித்தால் இவை தொடர்பான துறைகளில் மிளிரலாம்.
SOURCE:-http://kalvimalar.dinamalar.com
EmoticonEmoticon