இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் மொஹலாய கடைசி மன்னர் பகதூர் ஷா ஜாபர் குறித்து மோடி சொன்ன உண்மை

  
   மறைக்கப்பட்ட பல வரலாறுகள் அவ்வப்போது திட்டமிட்டு மறைக்க பாடுபடுபவர்களாலே வெளிகொண்டு வரப்படும் .....நிலையை நாம் அறிவோம்

அப்படிப்பட்டவர்களாலே சமிபத்தில் ஒரு உண்மையான சுதந்திர போராட்ட மாமனிதனின்  வரலாறு வெளி வந்தது.

அதனை நாம் இந்த குடியரசு தினத்தில் நினைவு கூருகிறோம்.






  பொதுவாக முஸ்லிம்கள் இந்திய நாட்டு விடுதலைக்காக,முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அனைத்து வரலாறுகளும் அழிக்கப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக இந்த நாட்டை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த  முஸ்லிம் மன்னர்களின் வரலாறுகள் ,அவர்களின் தியாகம் அனைத்தும் அழிக்க பட்டு அவர்களின் மேல் அவதூறுகள்,பழிசொல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.


முகலாய மன்னர்களில் கடைசி  பகதூர் ஷா ஜாபர் அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் .

 பகதூர் ஷா அவர்கள் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்.ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளிக்காமல் இருந்த குறுநில மன்னர்களை ஒன்றினைத்து விடுதலை வேட்கையை விதைத்த மாவீரர்.

 இந்திய நாட்டு விடுதலைக்காக தனது சொத்து,சுகத்தை இழந்தார்.தான் ஆசையாக பெற்று வளர்த்த தனது மகன்களை தன் கன்முன்னே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்க்கு இரையாக்கினர்.

இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டார் என்று கூறி ஆங்கிலேயர்களால் ரங்கூனுக்கு ( பர்மா) நாடு கடத்தப்பட்டார்.

 தாய் மண்ணில் இனி வாழ வாய்ப்பு  தனக்கு கிடைக்காது என வருந்தியவராக,  ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு (பர்மா) சென்றார்.

1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் (பர்மா) காலமானார். 

”அவர் உயிர் பிரியும்போது உடல் சற்றுஆடியிருக்கலாம்.ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது” என்று தாமஸ் லோவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

ரங்கூன் யார்க் சாலையில் இன்றும் இருக்கும் மன்னர் பகதூர்ஷா அவர்களின் அடக்கஸ்தலத்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பர்மா / மியான்மர் சென்றபோது நிதி திரட்டிப் புதுப்பித்தார். அந்த அடக்க ஸ்தலத்தில் இருந்து நேதாஜியும் ஒரு பிடி மண்ணை எடுத்து மக்கள் தனக்குப் பரிசாக வழங்கிய தங்க வாளின் கைப்பிடிக்குள் தூவி அடைத்து ஒருநாள் இந்த வாள் லண்டனின் வாசல்படியைத்தட்டும் என்று கூறினார். (அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)
.

மியான்மருக்கு சுற்றுப்பயணம் செய்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மாமன்னர் பகதூர்ஷா குறித்து அவர் உயிர்நீத்த இடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
‘‘மாமன்னர் அவர்களே! நீங்கள் இந்தியாவில் உங்களுக்கு என்று நிலத்தை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்தியாவே உங்கள் பெயரையும், தியாகத்தையும் மெய்சிலிர்ப்புடன் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. விடுதலை உணர்வின் அடையாளச் சின்னமான பகதூர்ஷாவின் புகழ் என்றும் வாழும்’’ எனக் குறிப்பிட்டார்.

முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மருக்கு  அரசுமுறைப் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருந்தார். அவருடன் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களோடு மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் உயிர்நீத்த இடத்திற்குச் சென்று உருக்கத்துடன் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார் ,

இத்தனை தியாகத்திற்க்கு சொந்தக்காரரான மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் அவர்களை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி source

ஆந்திரா டவுன் பகுதியில் ஒரு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய போது , நரசிம்ம ராவையும் பகதூர்  ஷா ஜாபரையும் ஒப்பிட்டுப் பேசினார்.

”பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் பகதூர் ஷா ஜாபர் ,அவர் இறந்த பிறகு அடக்கம் செய்ய இந்தியாவில் 2 யார்ட் இடம் கூட அளிக்கப்படவில்லை
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபரைப் போல், தில்லியில் உடலைப் புதைப்பதற்கு நரசிம்ம ராவுக்கு 2 யார்ட் நிலம் கூட மறுக்கப்பட்டது” என்றார்.



Previous
Next Post »