மவ்லூது பாடல் தீனூக்காகவா? தீனீக்காகவா?


மவ்லூது பாடலாமா?    

                                 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
என் அருமைச் சகோதர, சகோதரரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மவ்லூது பாடலாம் என்று கூறுபவர்களின் வாதங்களில் எமக்கு உடன்பாடில்லை! அவர் கீழ்கண்ட திருமறையை நினைவுகூறவேண்டும்!
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
“வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழி தவறவே மாட்டார்கள். (உமர்(ரலி) நூல்:ரஜீன்)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:-
“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
சகோதரர்களே எந்த ஒன்றையும் நபிகளார் (ஸல்) காட்டியிருந்தால் அதை தாம் முதலில் நடைமுறைப்படுத்தி காட்டியிருப்பார் மேலும் நபிகள் (ஸல்) மார்க்கச் சடங்குகளாக எதை செய்யவில்லையோ அதை நாம் பின்பற்றுவதற்கு சற்று தயக்கம் காட்டுவதில் தவறில்லை அப்படிப்பட்ட கோணத்தில் காணும் போது நபிகளார் மவ்லூது பாடினார்களா? நபிகளார் குறைந்தது 13க்கும் மேற்பட்ட திருமணங்களை செய்துக்கொண்டார்கள் அப்படியிருக்க ஒரு மனைவியாவது இந்த மவ்லூதை பாடியிருக்கிறார்களா? என்பதை சிந்தியுங்கள்.
நபிகளார் மவ்லூது ஓதவில்லை!
நபிகளாரின் மனைவிகள் மவ்லூது ஓதவில்லை!
சுவர்க்கத்தின் நன்மாராயங்கூறப்பட்ட நபித்தோழர்களில் யாரும் மவ்லூது ஓதவில்லை!
சிந்தியுங்கள் இவர்களைத்தாண்டி யாராவது ஒன்றை மார்க்கம் என்பதை காட்டிச்சென்றால் அதை அணுமதிக்கலாமா?
இதோ இந்த நபிமொழியை கேளுங்கள்
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம்ஏற்படுத்துபவருக்கு டமளிக்கிறாரோ, அவர்கள் மீதுஅல்லாஹ்வினதும்மலக்குகளினதும்மனிதர்களினதும் சாபம்உண்டாகிறது  என நபி  அவர்கள் நவின்றார்கள். (அலி(ரலி)  அபூதாவூது,நஸயீ. 
ப்னு மஸ்வூத்(ரலி)  அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள் 
ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக திக்ரு ஸலவாத்து,ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து ப்னு மஸ்வூத்(ரலி)  அவர்கள்,நான் நபி  அவர்களின் தோழர்களின் ஒருவனாக இருந்திருக்கிறேன்நபிஅவர்களுடைய காலத்தில்  யாரும் இவ்வாறு திக்ரு, ஸலவாத்துஓதுவதை நான் பார்த்ததே இல்லைஎனவேநீங்கள் நபி அவர்கள்காட்டித்தராத  பித்அத்தைச்  செய்கிறீர்கள் என்று  கூறி  அவர்களைபள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.
Markam
சரி! தாங்கள் அடிக்கடி 4 இமாம்கள் என்று கூறுகிறீர்களே அவர்கள் பித்அத்-பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்.
மாம் அபூஹனிபா (ரஹ்கூறியுள்ளார்கள் :-
நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும்நபிதோழர்களின் நடைமுறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் ருங்கள்மார்க்கத்தில்புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்ஏனெனில்,அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.
மாம் மாலிக் (ரஹ்கூறியுள்ளார்கள் :-
மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்றுஎவன் பெயர் சூட்டுகின்றானோஅவன் நபி அவர்கள் தனது ரிஸாலத்தில்(தூதுவப் பணியில்மோசடி செய்து  விட்டார்கள் என்றேகருதுகிறான்.எனேன்றால்அல்லாஹ்அல்யவ்ம அக்மல்து லக்கும்தீனுக்கும்……என்று சொல்லிவிடடான்அன்று மார்க்கமாக ல்லாததுஇன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.
மாம் ஷாபிஈ (ரஹ்கூறியுள்ளார்கள் :-

எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி,  அதை பித்அத்துஹஸனா(அழகிய பித்அத்துஎன்று  சொல்கிறானோ அவன் புதிதாக ஒருமார்க்கத்தையே  உண்டாக்கி விட்டான்.

மாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்கூறியுள்ளார்கள் :-
எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல் அவர்களும்அவர்களதுதோழர்களும் ருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்துஅவர்களைப்பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும்ஏனென்றால் பித்அத்துக்கள்அனைத்தும் வழிகேடுகளேயாகும்நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ
 குறிப்பு
சகோதரர்களே! இந்த 4 இமாம்கள் மரணித்தபின் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இந்த 4 இமாம்களின் பெயரால் விடப்பட்ட புரலிகளுக்கு அளவே இல்லை! சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே! நீங்கள் இல்லாத சமயத்தில் நீங்கள் சொன்னதாக ஒரு சிறு பொய்யை யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்! கோபம் வராதா? அதேபோன்று இந்த 4 இமாம்கள், இந்தியாவில் மார்க்கத்தை பரப்ப சில நல்லடியார்கள் (யாரை நீங்கள் அவ்லியாக்கள் என்று கூறுகிறீர்களே அவர்களைத்தான்) மரணித்தபின்பு அவர்கள் பெயரால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இட்டுக்கட்டியதை எல்லாம் நம்பி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறீர்கள் இது நியாயமா?
நபி ஈஸா (அலை) அவர்களே இதற்கு சிறந்த உதாரணம்
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 5, வசனங்கள் 116-117 ல் கூறுகிறான்:
‘இன்னும் ‘மர்யமுடைய மகன் ஈஸாவே ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர் ‘நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய் என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்’ அல் குர்ஆன் (5:116)
{மேலும் ஈஸா (அலை) கூறுவார்} ‘நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும்)’ (அல் குர்ஆன் 5:117)

உம்மியான அப்பாவி மக்களின் முன் பொய்யை நியாயப்படுத்தலாமா?
‘மக்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது:
1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல்.
2) போரில் ஒருவர் பொய் கூறுதல்.
3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்’ என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மாஃபின்து யஜீது (ரலி) ஆதாரம்: திர்மிதீ
திருந்துபவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன்
يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ مِنَ الَّذِينَ قَالُوا آمَنَّا بِأَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِن قُلُوبُهُمْ وَمِنَ الَّذِينَ هَادُوا سَمَّاعُونَ لِلْكَذِبِ سَمَّاعُونَ لِقَوْمٍ آخَرِينَ لَمْ يَأْتُوكَ يُحَرِّفُونَ الْكَلِمَ مِن بَعْدِ مَوَاضِعِهِ يَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ وَإِن لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوا وَمَن يُرِدِ اللَّهُ فِتْنَتَهُ فَلَن تَمْلِكَ لَهُ مِنَ اللَّهِ شَيْئًا أُولَئِكَ الَّذِينَ لَمْ يُرِدِ اللَّهُ أَن يُطَهِّرَ قُلُوبَهُمْ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் ‘நம்பிக்கை கொண்டோம்’ என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி ‘இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
சகோதரர்களே வேண்டாம் வழிகேடு!
42:44. ”இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?”" என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
42:45. மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவகாக்) கடைக்ககண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்; ”எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்.”" அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
42:46. (அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.
42:47. அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் – அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
எத்திவைப்பதுதான் நம் மீது கடமை
42:48. எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை – நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் – நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
42:53. (அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் – அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.

முடிவுரை
சகோதரர்களே இங்கு என்ன விபரீதம் அறங்கொண்டிருக்கிறது ஒருவரையொருவர் மாறி மாறி வார்த்தைகளால் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் அதுவும் இந்தப் புனிதமான ரமலான் மாதத்தில். வேண்டாம் இதிலிருந்து அனைவரும் விலகிக்கொள்வோம்! உண்மையை விளக்குவோம்! முடிந்தவரை நாம் இப்லிஷ் உருவாக்கும் வழிகேடுகளை எதிர்த்து போராடுவோம் (அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் மற்றும் மனிதருள் மாணிக்கமான நபிகள் (ஸல்) வாழந்த வழியில் அதாவது ஹதீஸ்)

சகோதரர்களே நீங்கள் ஒருவரையொருவர் வார்த்தையால் காயப்படுத்திக்கொள்வத மூமின்களுக்கு வருத்தமளிக்கும் ஏன் அல்லாஹ்வே கோபித்துக்கொள்வானே!

தவறான பாதையை நோக்கி செல்லும் சகோதரர்களுக்கு அறிவுரை கூறுவோம் அவர்களும் நேர்வழியை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும்!

சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் இறுதியாக கீழே உள்ள அல்லாஹ்வின் வார்த்தையை (திருக்குர்ஆன்) மற்றும் ஹதீஸ்-ஐ எத்திவைக்கிறேன்!

அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டும் விலகி இருப்பீராக! (7:199)

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்நடைமுறையில்சிறந்தது நபி அவர்களின் நடைமுறைகாரியங்களில் கெட்டது நபிஅவர்களின் சொல், செயல்அங்கீகாரம் ல்லாதபித்அத்துக்கள்,பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில்சேர்க்கும் என்று நபி அவர்கள்  கூறினார்கள். (ப்னு மஸ்வூத் (ரலி),ஜாபிர்(ரலி) புகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)
எனதருமைச் சகோதர சகோதரரிகளே! உத்தம நபிகளாரின் உண்ணதமான வாழ்க்கை முறையின் (ஹதீஸ்களின்) பக்கம் விரைந்திடுங்கள் அல்லாஹ்வுக்காக! நம் ரசூல் (ஸல்)க்காக மற்றும் உம்மி மக்களாகிய நம் சமுதாயத்திற்காக! மார்க்கத்திற்காக!  தங்களின் மறுமைக்காக குர்ஆன் – ஹதீஸ் அல்லாத பிற கிதாபுகளை புறம்தள்ளிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நம அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ்வே போதுமானவன்! நாம் மார்க்கத்தை எத்திவைப்பவர்களே!
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே)
இப்படிக்கு
அல்லாஹ்வின் அடிமை – உங்கள் நலம் விரும்பி

நன்றி:-சகோ.சிராஜ் அப்துல்லாஹ் & islamicparadise


POSTED BY
 
Previous
Next Post »